கடத்தப்பட்ட வரலாற்று சீன பொருட்களை திருப்பிக் கொடுத்த ஆஸ்திரேலியா
சீனாவில் இருந்து கடத்தி வரப்பட்ட மூன்று வரலாற்றுச் சிறப்பு மிக்க பொருட்களை ஆஸ்திரேலியா பெய்ஜிங்கிற்கு திருப்பி அனுப்பியுள்ளது.
100 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலான ஒரு டைனோசர் படிமமும் இரண்டு டாங் வம்சத்தின் உருவங்களும் கான்பெராவில் சீன அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
ஆஸ்திரேலிய எல்லையில் பணிபுரியும் போலீசார் பொருட்களை கைப்பற்றி விசாரணைக்காக அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.
அடுத்த மாதம் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் பெய்ஜிங்கிற்கு விஜயம் செய்வதற்கு சற்று முன்னர் இந்த ஒப்படைப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
“கலாச்சார சொத்துக்களை அதன் உரிமையான வீட்டிற்குத் திருப்பித் தருவதற்கு இரு நாடுகளும் எவ்வாறு திறம்பட இணைந்து செயல்பட முடியும் என்பதை இன்று நாங்கள் கண்டுள்ளோம்” என்று கலைத்துறை அமைச்சர் டோனி பர்க் தெரிவித்தார்.