பெய்ரூட்டில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
நகரின் வடக்குப் பகுதியில் உள்ள ஔகாரில் அமைந்துள்ள தூதரக வளாகத்தின் அருகே வந்த உள்ளூர் இளைஞர் ஒருவர் வாயில் அருகே துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
ஊழியர்களுக்கோ, கட்டிடத்திற்கோ எந்த சேதமும் ஏற்படவில்லை. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டிற்கு எதிரான தீவிர கோபத்தின் மத்தியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
படையினருடனான துப்பாக்கிச் சூட்டின் போது காயமடைந்த தாக்குதல்தாரி கைது செய்யப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் அணிந்திருந்த உடையில் ஐஎஸ் என்று எழுதப்பட்டிருந்ததாக சமூக வலைதளங்களில் பரவிய படங்களின் மூலம் தெரியவந்துள்ளது.
அவர் வந்த மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்புடன் தாக்குதல் நடத்தியவர் எப்படி இங்கு வந்தார் என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பரில், இங்குள்ள அமெரிக்க தூதரகம் மீது துப்பாக்கி ஏந்திய நபர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
இதற்கிடையில் தெற்கு இஸ்ரேலில் உள்ள நெகேவ் பகுதியில் உள்ள ராணுவ தளத்தில் வெடிகுண்டு வெடித்ததில் 9 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். இரண்டு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.