ஹிஸ்புல்லா போராளிகளால் வடக்கு இஸ்ரேல் மீது தாக்குதல்
தெற்கு லெபனானில் உள்ள பல கிராமங்கள் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக லெபனானின் ஹெஸ்புல்லா போராளிகள் வடக்கு இஸ்ரேல் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த ஆளில்லா விமானத் தாக்குதலில் இஸ்ரேலிய இராணுவத்தைச் சேர்ந்த இருவர் காயமடைந்ததாகவும் தீ விபத்து ஏற்பட்டதாகவும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
ஹமாஸ் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் தஹ்னியின் படுகொலைக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவோம் என ஈரானும் ஹிஸ்புல்லாவும் கருத்து தெரிவித்திருந்த நிலையில் இந்த ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
(Visited 3 times, 1 visits today)