Site icon Tamil News

இலங்கையில் தாதியர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கிவைப்பு!

இலங்கையில் நோயாளர் பராமரிப்பு சேவைகளை வலுப்படுத்தும் வகையில் 2,519 புதிய தாதியர்களுக்கான நியமனக் கடிதங்களை இன்று (17.11) வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இந்த நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, 2018 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட மாணவர் தாதியர் குழுவின் கீழ், 2020 ஜனவரியில் பயிற்சியை ஆரம்பித்து, பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர் தாதியர்கள் இங்கு நியமிக்கப்படுவார்கள்.

தற்போது நாடளாவிய ரீதியில் 42,000 தாதியர்கள் பணிபுரிந்து வருவதாகவும், இந்த ஆட்சேர்ப்பின் மூலம் நாட்டில் தாதியர்களின் எண்ணிக்கை 45,000ஐ தாண்டும் எனவும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Exit mobile version