Site icon Tamil News

TikTokஐ தடை செய்த மேலும் ஒரு நாடு

சமூக நல்லிணக்கத்திற்கான எதிர்மறையான முயற்சிகளை மேற்கோள் காட்டி, சீனாவிற்கு சொந்தமான வீடியோ பகிர்வு செயலியான TikTok க்கு தடை விதிப்பதாக நேபாள அரசாங்கம் அறிவித்தது,

அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் டிக்டோக்கை தடை செய்வதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக நாட்டின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரேகா ஷர்மா தெரிவித்துள்ளார்..

எனினும், இந்த முடிவு எப்போது அமலுக்கு வரும் என்பது இன்னும் தெரியவில்லை என்று அரசாங்க செய்தித் தொடர்பாளரான ரேகா சர்மா தெரிவித்துள்ளார்.

கருத்து சுதந்திரம் ஒரு அடிப்படை உரிமை என்றாலும், சமூகத்தின் பெரும் பகுதியினர் வெறுப்பூட்டும் பேச்சின் போக்கை ஊக்குவிப்பதற்காக TikTok ஐ விமர்சித்துள்ளனர் என்று அரசாங்கம் கூறியது.

கடந்த நான்கு ஆண்டுகளில், வீடியோ பகிர்வு செயலியில் 1,647 சைபர் கிரைம் வழக்குகள் பதிவாகியுள்ளது.

நேபாள நாளிதழின் படி, நேபாள காவல்துறையின் சைபர் பீரோ, உள்துறை அமைச்சகம் மற்றும் டிக்டோக்கின் பிரதிநிதிகள் கடந்த வார தொடக்கத்தில் இந்த பிரச்சினையை விவாதித்ததாகவும், தொழில்நுட்ப தயாரிப்புகள் முடிந்ததைத் தொடர்ந்து தடை விதிப்பு முடிவு அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version