இலங்கை வந்தது இந்திய நீர்மூழ்கி கப்பல்
இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘ஐஎன்எஸ் ஷல்கி’ என்ற நீர்மூழ்கி கப்பல் நேற்று (02) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.
64.4 மீட்டர் நீளம் கொண்ட இந்த நீர்மூழ்கிக் கப்பலில் 40 பேர் பணிபுரிகின்றனர்.
கடற்படைத் தளபதி கமாண்டர் ராகுல் பட்நாயக்குக்கும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்கவுக்கும் இடையில் நேற்று உத்தியோகபூர்வ சந்திப்பு இடம்பெற்றதாக கடற்படை தெரிவித்துள்ளது.
‘ஐஎன்எஸ் ஷால்கி’ நீர்மூழ்கிக் கப்பலானது இலங்கையில் தங்கியிருக்கும் போது அதன் செயல்பாட்டு செயல்திறன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியில் இலங்கை கடற்படை உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த நீர்மூழ்கிக் கப்பலின் குழுவினர் தீவின் பல பகுதிகளுக்குச் சென்று முக்கிய இடங்களைப் பார்வையிடுவார்கள் என கடற்படை தெரிவித்துள்ளது.
‘ஐஎன்எஸ் ஷல்கி’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் ஆகஸ்ட் 4ஆம் திகதி தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு தீவை விட்டுச் செல்லும் என்று கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.