இலங்கை செய்தி

இன ஒடுக்குமுறை கருப்பொருளில் மட்டக்களப்பில் நடைபெற்ற விழிப்புணர்வு கண்காட்சி

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இலங்கை அரசினால் திட்டமிட்டவகையில் மேற்கொள்ளப்பட்டுவரும் இன ஒடுக்குமுறை மற்றும் அடக்கு முறைகளை பிரதிபலிக்கும் வகையில் இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழரின் இணைப்பாட்சி கோரிக்கையின் தோற்றம் எனும் கருப்பொருளில் விழிப்புணர்வு கண்காட்சியும் மட்டக்களப்பு தன்னாமுனை மியானி நகர் மண்டபத்தில் நடைபெற்றது.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் கிழக்குமாகாண அங்கத்துவ அமைப்புக்கள் இணைந்து நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.

இதன்ஆரம்ப நிகழ்வாக தன்னாமுனை பொது விளையாட்டு மைதானத்தில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து தமிழர்களுக்கான சமஸ்டி அதிகாரத்தை வலயுறுத்தும் வகையலான ஊர்வலம் நடைபெற்றது.

இதன்போது கிழக்கு மாகாணத்தில் அழிக்கப்படும் வரலாறுகள் தொடர்பான ஆவண தொகுப்பு வெளியிடப்பட்டது.

ஐக்கிய இலங்கைகக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு எனும் தலைப்பில் மக்கள் பிரகடனம் வெளியிடப்பட்டது.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் கண்டுமணி லவகுசராசா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள்,வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்கள் உறவுகளின் சங்க பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.

வடக்கு கிழக்கில் பல வருட காலமாக இலங்கை அரசின் அடக்கு, ஒடுக்கு முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டுவரும் தமிழ்பேசும் மக்கள் பல தசாப்தங்களாக உரிமை சார்ந்த பிரச்சினைகளுக்கும், சவால்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை வெளிக்காட்டும் வகையிலான விழிப்புணர்வுக் கண்காட்சியோடு, சமஷ்டியின் தோற்றம் தொடர்பான நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் உரையாற்றிய வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் கண்டுமணி லவகுசராசா,

கடந்த டிசெம்பர் 10ம் திகதி சர்வதேச மனித உரிமை தினமாகும், அன்றைய தினத்தில் உலகளாவிய ரீதியில் உள்ள மக்கள், அமைப்புக்கள் மற்றும் நிறுவனங்கள் இதனை அனுஸ்டிப்பது வழமையாகும்.

இந்த மனித உரிமை தினத்திலே இலங்கையின் வடக்கு கிழக்குப் பிரதேசங்களிலுள்ள மக்களைப் போன்று மனித உரிமை மறுக்கப்படுகின்ற ஏனைய நாடுகளிலுள்ள மக்கள் தங்களுக்கு இடம் பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்களை வெளிக்கொணரும் வகையில் மேற்கொள்வார்கள்,

சில நாடுகள் இம் மனித உரிமைகள் தினத்திலே தங்களதுநாட்டில் மேம்பட்டிருக்கும் மனித சார்ந்த விடயங்களை மையப்படுத்தி அனுஸ்டிப்பது வழமை.

இம்மனித உரிமை தினம் ஏன் அனுஸ்டிக்கப்படுகின்றது என்பதற்கான அடிப்படை இருக்கின்றது. அந்த வகையில் 02ம் உலக மகா யுத்த்தின் போது மிக மோசமாக சிறுவர்கள் மற்றும் பெண்கள் பாதிக்கப்பட்டனர்,

அத்துடன் அதிக உயிர் இழப்புக்கள் ஏற்பட்ட நிலையில்தான் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையினால் சர்வதேச மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய பிரகடனம் 1948.12.10ம் அன்று கொண்டு வரப்பட்டது.

இப்பிரகடனமானது கொண்டு வரப்பட்டதன் பின்னணியில் மனித உயிர்கள் காப்பாற்றப்படல் வேண்டும், மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும், அனைத்து மக்களும் தங்களுக்கான உரிமைகளுடனும் சுதந்திரத்துடனும் தமக்கான அடையாளத்துடன், தேசியத்துடனும் வாழ வேண்டும் எனும் நல்லெண்ணத்துடன் கொண்டு வரப்பட்டது.

ஆனால் இப்பிரகடத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் உலகளாவிய ரீதியில் எந்தளவிற்கு கடைப்பிடிக்கப்படுகின்றது என்றால் அது கேள்வியாகவே இருக்கின்றது.

இருந்த போதும் பிரகடம் கொண்டு வரப்பட்ட டிசெம்பர் 10ம் திகதி அன்று உலகம் முழுவதும் மனித உரிமையினை பேணிப்பாதுகாக்கும் எண்ணத்துடன் சிலரும், தங்களுக்கு இன்றுவரைக்கு இம் மனித உரிமை மறுக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றது என்பதனை வலியுறுத்தி தங்களது தேசத்திற்கும் சர்வதேசத்திற்கும் வெளிக்கொணரும் வகையிலும் அனுஸ்ரித்துக் கொண்டு வருகின்ற நிலமையினை நாம் பார்க்கின்றோம்.

அந்த வகையில் இங்கு கூடியிருக்கின்ற நாம் ஏன் இந்த மனித உரிமை தினத்தினை அனுஸ்டிக்கின்றோம் என்பதும் நாம் அனைவரும் அறிவோம்.இலங்கையில் எண்ணிக்கையில் சிறுபான்மையாகவும், குறிப்பாக வடக்கு கிழக்கு பிரதேசங்களில் பெரும்பான்மையாக வாழுகின்ற நாங்கள் தமிழ் மன்னர் ஆட்சிக் காலத்தில் தனித்துவமாக கட்டமைக்கப்பட்டிருந்த அரசாட்சியினை நடாத்தி தன்னிறைவுடனும், தனித்துவத்துடனும் வாழ்ந்த வரலாறுகள் எமக்குண்டு என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.

ஆனால் அதன் பின்னர் வந்த அந்நியரின் காலனித்துவ ஆட்சிக் காலத்தில் இருந்து இன்றைய பேரினவாத சிங்கள அரசின் ஆட்சிக் காலம் வரை இன ஒடுக்குமுறைகளுக்கும் அடக்கு முறைகளுக்கும் உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஓர் இனமான வாழுகின்ற சூழ்நிலைகளுக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம்.

மேற்படி அந்நியர் ஆட்சிக் காலம் தொடக்கம் பேரினவாத சிங்கள அரசின் தற்கால ஆட்சி காலம் வரை எமது வடக்கு கிழக்கு மக்கள் பல வகையான பாதிப்புக்களுக்கு உள்ளான நிலையில், வடக்கு கிழக்கில் 75 வருட காலத்திற்கு மேலாக புரையோடிக்கிடக்கின்ற தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியில் தீர்வு வேண்டி எமது தமிழ் தலைவர்கள் பல வழிகளிலும் போராட்டங்களை மேற்கொண்டிருந்தனர்.

மேற்படி இன அடக்கு முறைகளுக்கும், ஒடுக்கு முறைகளுக்கும் உள்ளாகி இருக்கும் எமது வடக்கு கிழக்கு மக்கள் தனியான தேசியம்,தாயகம் மற்றும் சுயநிர்ணய உரிமையுடனும் வாழக் கூடிய வகையிலான “ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு” வேண்டும் எனும் அரசியல் தீர்வு கிடைக்கப் பெறும் பட்சத்திலேயே வடக்கு கிழக்கு வாழ் தமிழ்பேசும் மக்கள் நின்மதியாகவும் சுயமாகவும் தமக்கான அடையாளத்துடனும் வாழ முடியும் என்பதில் ஐயமில்லை.

(Visited 3 times, 1 visits today)

Prasu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content