சிறுபான்மையினருக்கு எதிரான மதத்துன்புறுத்தல்கள் குறித்து அமெரிக்கா தகவல்!
2022ஆம் ஆண்டு இலங்கையில் சிறுபான்மையினருக்கு எதிரான மதத்துன்புறுத்தல்கள் குறித்து மதங்கள் தொடர்பான தமது வருடாந்த சுயாதீன அறிக்கையில் அமெரிக்கா தகவல்களை வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில் இன, மத அடிப்படையில் சிறுபான்மையினரை மதித்து நல்லிணக்க செயற்பாட்டின் ஒரு அங்கமாக மதச் சுதந்திரத்தை உள்ளடக்கவேண்டியதன் அவசியத்தை இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருடனான சந்திப்புகளின்போது அமெரிக்க தூதரகம் வலியுறுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம் நீண்டகாலமாக தடுப்புக்காவலில் உள்ளவர்களுக்கு குறிப்பாக காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய நடைமுறையை உறுதி செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதற்காக இலங்கைக்கு வருகைதந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகள் அரசாங்க அதிகாரிகளைச் சந்தித்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.