ஜெர்மனியில் பாரிய ஆபத்தாக மாறியுள்ள AI – சான்ஸ்லர் வெளியிட்ட தகவல்
ஜெர்மனியில் அண்மைக்காலங்களாக செயற்கை நுண்ணறிவு அதாவது AI தொழில் நுட்பத்தின் மூலம் பல பிழையான தகவல்கள் இணையதளங்களின் ஊடாக பரப்பப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு பகிரப்படும் கருத்துக்களால் சர்ச்சைகள் எழுந்தவண்ணம் உள்ளது. இந்நிலையில் ஜெர்மன் சான்ஸ்லர் ஓலா சொல்ஸ் அவர்களுடைய பேச்சு ஒன்று இணையதளங்களில் பரவி வருகின்றது.
அதாவது ஜெர்மனுடைய சான்ஸ்லர் ஓலா சொல்ஸ் அவர்கள் AFD கட்சியை தடை செய்ய வேண்டும் என்றும், அரசாங்கத்துடைய கொள்கை பிரகடனத்தை வெளியிட்டார் என்றும் ஒரு இணைய தளத்தில் இவ்வகையான AI தொழில் நுட்பத்தின் மூலம் சில பேச்சிகள் வெளியிடப்பட்டு வந்துள்ளன.
இதனால் ஜெர்மனி நாட்டில் மக்களிடையேயும், கட்சிகளிடையேயும் பல சர்ச்சகைள் எழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் தற்பொழுது இந்த வீடியோ ஒன்றில் வந்த காட்சிகள் தவறான காட்சி என்று ஜெர்மன் அரசாங்கத்துடைய பேசவல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.