Site icon Tamil News

WhatsAppஇல் அறிமுகமாகும் AI chatbot

மெட்டாவுக்கு சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனம், பயனர்களுக்காக அதன் செயலியில் அவ்வப்போது பல புதிய அம்சங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் கூட ஒரே வாட்ஸ்அப்பில் இரண்டு கணக்குகளை பயன்படுத்தும் அம்சம், புகைப்படம் மற்றும் வீடியோக்களை எச்டி குவாலிட்டியில் அனுப்பும் அம்சம் போன்றவற்றை அறிமுகம் செய்தது.

இதனை தொடர்ந்து தற்பொழுது வாட்ஸ்அப்பில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலமாக இயங்கக்கூடிய சாட் பாட்டை அறிமுகம் செய்துள்ளது. மெட்டா ஏஐ எனப்படும் அதிநவீன ஏஐ தொழில்நுட்பத்தை, நிறுவனம் அதன் பல்வேறு தளங்களில் ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இந்த ஏஐ சாட் பாட்டை அனுகுவதற்கு வண்ணமயமான மற்றும் பயனர்களின் கண்ணை கவரும் வகையில் ஒரு ஷார்ட்கட் ஆனது கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஷார்ட் கட், மெசேஜ் ஐகானுக்கு மேலே வட்ட வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை கிளிக் செய்தவுடன் பயனர்களுக்கு பல சிறப்பான அனுபவங்களை வழங்கும் ஏஐ சாட் பாட்டின் வரவேற்பு உரை தோன்றும்.

இதன்பிறகு அதில் உரையாடலை தொடங்கலாம். இந்த அம்சம் மூலம் நீங்கள் உங்களுக்காக ஒரு சேட்டை தொடங்குவதற்கான நேரமானது கணிசமாக குறைக்கப்படும். இந்த அம்சம் இன்னும் மேம்படுத்தப்பட்டு கொண்டு இருப்பதால், தற்பொழுது குறைந்த எண்ணிக்கையிலான ஆண்ட்ராய்டு பீட்டா பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.

மேலும் வரும் வாரங்களில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஸ் என அனைத்து பயனர்களுக்கும் இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்படும். வாட்ஸ்அப்பைத் தொடர்ந்து இந்த ஏஐ சாட் பாட் அம்சம் மெட்டாவின் இன்ஸ்டாகிராம் மற்றும் அதன் சமீபத்திய தயாரிப்பான ரே-பான் மெட்டா ஸ்மார்ட்கிளாஸ் உட்பட அனைத்து தளங்களிலும் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version