33 வருஷத்துக்குப் பின் குருவுடன் இணைந்த சிஷ்யன் – தலைவர் வெளியிட்ட செய்தி
நடிகர் ரஜினிகாந்த் தலைவர் 170 படத்தில் நடித்து வரும் நிலையில், அதன் முதற்கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரத்திலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு திருநெல்வேலி உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் நடைபெற்றன.
இந்நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக நடிகர் ரஜினிகாந்த் மும்பை சென்ற நிலையில், அங்கே அமிதாப் பச்சன் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
மேலும், 33 ஆண்டுகளுக்கு பிறகு என்னுடைய குருவுடன் இணைந்து பணியாற்றப் போவதை நினைக்கும் போதே சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
ஜெய்பீம் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் மற்றும் ரித்திகா சிங் என மல்டி ஸ்டாரர் படமாக தலைவர் 170 உருவாகி வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் அனைவரையும் மதிக்கும் உயரிய பண்பு கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆரம்பத்தில் அமிதாப் பச்சன் படங்களை ரீமேக் செய்து நடித்தே சூப்பர்ஸ்டார்.
ரஜினிகாந்த் 33 ஆண்டுகள் கழித்து மீண்டும் என்னுடைய குருவுடன் இணைந்து பணியாற்றுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன் என அமிதாப் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.
அந்தா கனூன், ஹம் மற்றும் கெராஃப்டார் உள்ளிட்ட சில படங்களில் அமிதாப் பச்சன் உடன் அப்பவே இணைந்து ரஜினி நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.