ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட நடிகை ரோஜா தோல்வி
நாடாளுமன்றத்தேர்தலோடு சேர்த்து ஆந்திர மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்பட்டது.
இந்த தேர்தலில் தமிழக எல்லையை ஒட்டியுள்ள நகரி தொகுதியில் பிரபல நடிகையும், ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசில் மந்திரியாக இருந்தவருமான ரோஜா போட்டியிட்டார்.
கடந்த 2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில் தொடர்ந்து 2 முறை போட்டியிட்டு வெற்றி வாகை சூடிய ரோஜா, ‘ஹாட்ரிக்’ வெற்றிக்காக காத்திருந்தார்.
ஆனால் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்ட நிலையில், முதல் சுற்றில் இருந்தே அவர் பின்தங்கியே இருந்தார். இதனையடுத்து அவர் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வெளியேறினார்.
இதற்கிடையே ரோஜாவை எதிர்த்து போட்டியிட்ட தெலுங்கு தேசம் கட்சி சார்பில் போட்டியிட்ட பானு பிரகாஷ் 40,687 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
(Visited 10 times, 1 visits today)