கருப்பு புகையை வெளியிடும் வாகனங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை
கறுப்பு புகையை வெளியேற்றும் வாகனங்களை சோதனையிட ஏர் எமிஷன் ஃபண்ட் மூலம் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதன்படி, அதிகளவான கறுப்பு புகையை வெளியிடும் லொறிகள், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் தொடர்பில் எவருக்கும் முறைப்பாடுகளை வான் மாசு நிதியத்தின் 070 3500 525 என்ற வாட்ஸ் அப் இலக்கத்திற்கு தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, விதிகளை பின்பற்றாத சம்பந்தப்பட்ட வாகனங்களின் வருவாய் உரிமம் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படும்.
இவ்வாறு கறுப்புப் பட்டியலில் உள்ள வாகனங்களை வேறு ஒருவருக்கு விற்கவோ அல்லது மாற்றவோ முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 5 times, 1 visits today)