இலங்கை முக்கிய செய்திகள்

இலங்கையில் கோர விபத்து – ஒருவர் பலி – 25 பேர் படுகாயம்

சிலாபம் – கொழும்பு வீதியில் மாதம்பே – கலஹிடியாவ பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும், ஏற்றப்பட்ட லொறியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் சுமார் 25 பேர் காயமடைந்து சிலாபம் பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலை சிலாபம் ஊடாக கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேரூந்து ஒன்று வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் புத்தளத்திலிருந்து கொழும்பு நோக்கி அதே திசையில் பயணித்த சீமெந்து லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தின் பக்கவாட்டு பகுதி பலத்த சேதமடைந்தது.

விபத்து ஏற்படும் போது அந்த பகுதியில் மழையுடன் கூடிய காலநிலை நிலவியதாக தெரிவிக்கப்படுகின்றது.

(Visited 17 times, 1 visits today)
See also  இலங்கை: ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை சந்தித்த ஸ்ரீதரன்
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content