பிரைட் ஆஃப் பிரிட்டன் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பெண்!
மூளைக் கட்டியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், தொண்டு நிறுவனம் ஒன்றுக்காக 20,000 பவுண்டுகளுக்கு மேல் நிதி திரட்டிய இளம்பெண் ஒருவர், பிரைட் ஆஃப் பிரிட்டன் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் திகதி அவருக்கு கிரானியோபார்ங்கியோமா இருப்பது கண்டறியப்பட்டது.
ஒரு அரிய தீங்கற்ற கட்டி பொதுவாக மூளையின் அடிப்பகுதிக்கு அருகில் வளர்ந்து முக்கியமாக இளைஞர்களை பாதிக்கிறது.
இந்த நோயினால் பாதிக்கப்பட்ட மாயா டோஹிட் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். இருப்பினும் அவர் தொண்டு நிறுவனங்களுக்காக நிதி சேகரிப்பதை தொடர்ந்து மேற்கொண்டு வந்துள்ளார்.
மான்செஸ்டரின் கிறிஸ்டி மருத்துவமனையில் மாயா அறுவை சிகிச்சை செய்துக்கொண்டார். பல சிகிச்சைகள் அவருடைய நினைவு திறனை பாதித்தது. ஒரு கட்டத்தில் அவர் இறந்துவிடுவார் என எண்ணியதாக மாயாவின் தாய் கூறியுள்ளார்.
இருப்பினும் அவர் தன்னை பற்றி நினைத்து கவலைப்படுவதை விட தொண்டு நிறுவனத்திற்கு சேவை செய்ய முற்பட்டார். ஆகவே அவருக்கு குறித்த விருது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.