Site icon Tamil News

இஸ்ரேலிய பெண் ஒருவரின் உயிரைக் காப்பாற்ற தன்னுயிரை தியாகம் செய்த இலங்கை பணிப்பெண்

ஹமாஸின் தாக்குதலுக்கு உள்ளான இஸ்ரேலிய பெண் ஒருவரின் உயிரைக் காப்பாற்ற இலங்கை பணிப்பெண் அனுலா தனது உயிரை தியாகம் செய்ததாக இஸ்ரேல் மக்கள் கருதுவதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

மேலும் அவரது வீரத்தை கருத்தில் கொண்டு இஸ்ரேல் அரசு அவரது குடும்பத்திற்கு எதிர்காலத்தில் இழப்பீடு வழங்கும் என்றும் அவர் கூறுகிறார்.

உயிரிழந்த இலங்கை தாதி அனுலா ஜயதிலக்கவின் உடலை ஏற்றிய விமானம் இன்று (27) இஸ்ரேலில் இருந்து பயணித்துள்ளது.

இந்த விமானம் நாளை காலை 11 மணிக்கு இலங்கையை வந்தடையும் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதரகத்திற்கு விசா புதுப்பித்தல் தொடர்பாக 1680 கோரிக்கைகள் வந்துள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக அரசாங்க தகவல் திணைக்களம் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Exit mobile version