Site icon Tamil News

பிரித்தானியாவில் அரிய வகை பூனை – 4 வயதில் வெளியான இரகசியம்

பிரித்தானியாவில் அரிய வகை பூனை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

பிரித்தானிய வாரிங்டன் தத்தெடுப்பு நிலைய ஊழியர்கள் முதலில் பூனைக்கு பெரிய மூக்கு உள்ளதெ நினைத்தனர். எனினும் சோதனையின்போது தான் தெரிய வந்தது அந்த 4 வயதுப் பூனைக்கு 2 மூக்குகள் உள்ளன என்று.

அதற்குப் பிறக்கும்போதே 2 மூக்குகள் இருந்திருக்கக்கூடும் என்று விலங்குநல மருத்துவர் ஒருவர் கூறினார். 2 மூக்குகள் கொண்ட பூனை மிகவும் அரியது என்று சொன்ன அவர், அதனால் பூனைக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றார்.

அதற்கு நேன்னி மெக்பீ (Nanny McPhee) என்று பெயரிடப்பட்டுள்ளது. நேன்னி மெக்பீ என்பது சிறுவர்களுக்கான புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் மாறுபட்ட மூக்கு வடிவம் கொண்ட ஒரு கதாபாத்திரம். அந்தப் பூனையைத் தத்தெடுக்கப் பலர் முன்வருவர் என்று நிலைய ஊழியர்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.

Exit mobile version