அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வழங்கிய வாக்குறுதி
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நாட்டை ஒருங்கிணைக்க உறுதியளித்துள்ளார்.
இரண்டாம் தவணையின்போது இதனை செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்ற வாரம் குடியரசுக் கட்சியின் டொனல்ட் டிரம்புடன் நடந்த நேரடி விவாதத்தில் பைடன் மோசமாகத் தடுமாறினார்.
அதனால், ஜனாதிபதி போட்டியிலிருந்து திரு பைடன் விலக வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
நிலைமையைச் சுமுகமாக்க ABC தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த பைடன், அது உரிய பலனைக் கொடுத்ததாகத் தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
பென்சில்வேனியாவில் (Pennsylvania) பைடன் பிரசாரம் செய்து வருகிறார். 7 நிமிடம் உரையாற்றிய அவர், அதிபர் வேட்பாளர் மீதான நம்பிக்கை நெருக்கடி குறித்து எதுவும் சொல்லவில்லை.
ஆனால், 81 வயது பைடன் தமது வயது குறித்து நகைச்சுவையாகப் பேசினார்.
(Visited 8 times, 1 visits today)