Tamil News

மியன்மாரில் 4.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம்…

மியான்மர் நாட்டில் ஏற்பட்ட 4.5 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், பொதுமக்களிடையே அச்சம் நிலவி வருகிறது.

ஆசிய கண்டம் மற்றும் ஐரோப்பிய கண்டங்களுக்கு இடையேயான கண்ட தட்டுகளில் அடிக்கடி நிலநடுக்கங்கள் தோன்றி வருகிறது. இதன் காரணமாக ஆசியாவின் பல்வேறு பகுதிகளிலும் சக்திவாய்ந்தது முதல் மிதமான நிலநடுக்கங்கள் வரை பதிவாகி விடுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் 6.5 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் தாக்கியதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்தனர்.

ANI on X: "An earthquake with a magnitude of 4.5 on the Richter Scale hit  Myanmar at 04:53 am today: National Center for Seismology  https://t.co/kQDO76Nld4" / X

இந்த நிலையில் இன்று அதிகாலை 4.53 மணி அளவில் மியான்மர் நாட்டில் 4.5 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதன் காரணமாக கட்டிடங்கள் லேசாக குலுங்கியது. இதனால் அச்சமடைந்த மக்கள் வீட்டிற்கு வெளியே ஓடினர்.

இருந்த போதும் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆசியா முழுவதும் தொடர்ந்து இதுபோன்ற நிலநடுக்கங்கள் தோன்றுவதால் மக்களிடையே பெரும் அச்சம் நிலவி வருகிறது.

Exit mobile version