கொழும்பில் ஊடகவியலாளர் ஒருவர் மர்மமான முறையில் மரணம்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய ஊடகவியலாளர் ஒருவரின் சடலம் மோதரை கடற்கரைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.
சிறுவர் நிகழ்ச்சிகளின் தயாரிப்பாளராகப் பணியாற்றிய இந்துனில் ஜயவர்தன என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
அவரது சடலம் மோதரை கடற்கரைப் பகுதியில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிலியந்தலை பிரதேசத்தில் வசிக்கும் அவர் தனது வீட்டில் இருந்து இரண்டு நாட்களாக காணாமல் போயுள்ளதாக ஊடகங்கள் முன்னர் செய்தி வெளியிட்டிருந்தன.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் பொலிஸார் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவரின் மரணம் கொலையா தற்கொலையா என இதுவரையில் தெரியவந்துள்ளது. அவரது மரணம் எவ்வாறு இடம்பெற்றது என்பதை அறிய பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்துனில் ஜயவர்தன அவர்கள் இலங்கை தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார் மேலும் அவர் இதற்கு முன்னர் லக்பிம பத்திரிகை மற்றும் ஸ்வர்ணவாஹினியில் பணியாற்றியுள்ளார்.