Site icon Tamil News

இலங்கையில் 40 பேரின் உயிரை காப்பாற்றிய நிலையில் உயிர்விட்ட சாரதி

அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் சாரதி ஒருவர் இரவு 8.15 மணியளவில் திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

பேருந்து வீதியை விட்டு விலகி நின்றதால் பயணிகள் உயிர் தப்பியதாக இகினியாகல பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று இரவு 7.00 மணியளவில் குறித்த பேருந்து அம்பாறை டிப்போவில் இருந்து கொழும்பு நோக்கிப் பேருந்து புறப்பட்டது.

சாரதிக்கு ஏற்பட்ட சில சுகயீனம் காரணமாக இகினியாகல பாடசாலைக்கு அருகில் பேருந்தை நிறுத்திவிட்டு அந்த இடத்தில் இருந்த வைத்தியரிடம் மருந்து வாங்கிக் கொண்டு கொழும்பு நோக்கி புறப்பட்டுள்ளார்.

அவரது உடல்நிலை மோசமாக இருப்பதால் இந்தப் பயணத்தை மேற்கொள்ள வேண்டாம் என்று மருத்துவர் அறிவுறுத்தியுள்னார். வேறு சாரதிகள் இல்லை என்று கூறி பேருந்தை கொழும்பு நோக்கி ஓட்டிச் செல்ல ஆரம்பித்து 10 மைல் தூரம் சென்ற போதே பேருந்து வீதியை விட்டு விலகியுள்ளது.

பின்னர், சாரதி உடனடியாக கிண்ணியாகலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அதற்குள் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்க்ள தெரிவித்துள்ளனர்.

பேருந்தில் பயணம் செய்த ஒருவருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. விபத்து ஏற்படும் போது பேருந்தில் 40 பயணிகள் இருந்ததாக பேருந்தின் நடத்துனர் தாரக நுவன் தெரிவித்தார்.

பரகஹகலே பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 49 வயதுடைய மஞ்சுள பிரசன்ன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை இகினியாகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version