50 ஆண்டுகாலமாக மண்ணில் புதையுண்டு இருந்த குவலை – திறந்து பார்த்தவர்களுக்கு கிடைத்த பொக்கிஷம்!

50 ஆண்டுகளுக்கும் மேலாக நிலத்தடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அரிய தங்க நாணயங்களின் தொகுப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய காலப்பகுதியில் அதன் மதிப்பு $100 மில்லியன் USD அல்லது சுமார் $160 மில்லியன் AUD ஆகும்.
டிராவலர் கலெக்ஷன் என்று அழைக்கப்படும் இந்தப் புதையல், அரிய நாணயங்களின் உலகத்தையே மாற்றப்போகிறது என ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
“இதுவரை ஏலத்திற்கு வந்த மிகவும் மதிப்புமிக்க நாணயவியல் சேகரிப்பு இது என்று நிபுணர்கள் விவரிக்கிறார்கள்.
1629 ஆம் ஆண்டு ஹப்ஸ்பர்க்கைச் சேர்ந்த ஃபெர்டினாண்ட் III க்காக அச்சிடப்பட்ட 100 டக்கட் தங்க நாணயம் தனித்துவமான பொருட்களில் ஒன்றாகும், இதன் எடை 348.5 கிராம். நிபுணர்கள் இதன் மதிப்பு சுமார் $1.35 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடுகின்றனர்.
ஐரோப்பாவைச் சேர்ந்த ஒரு நாணய சேகரிப்பாளர் மற்றும் அவரது மனைவி, வரலாற்றுச் சிறப்புமிக்க அரிய நாணயங்களைத் தேடி ஒரு பயணத்தை தொடங்கியபோது இந்த புதையல் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.