Site icon Tamil News

ஜெர்மனி மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றம் – வெளிவரும் தகவல்

ஜெர்மனியில் ஆயுட்காலம் தொடர்பான புதிய புள்ளி விபரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் நீண்ட காலம் வாழ்வோரின் ஆயுட்காலம் அதிகரித்து வருவதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

ஆண்கள் சராசரியாக 78.6 ஆண்டுகள் வாழுவதாகவும், பெண்கள் சராசரியாக 88.3 ஆண்டுகள் வாழுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொவிட் வைரஸ் பரவலின் போது ஆயுட்காலம் குறைந்த நிலையில் இருந்த போதும், தற்பொழுது சீரான நிலமை காணப்படுவதாக குறிப்பிடப்பட்டு்ளளது.

இதே காலப்பகுதியை கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், ஆண்களின் ஆயுடக் காலம் 0.6 சதவீதமாக வளர்ச்சியடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் 2023 ஆம் ஆண்டில் பிறந்த பெண்கள் குழந்தைகள், 85 தொடக்கம் 93 ஆண்டுகள் வாழ கூடிய நிலையில் தற்பொழுது சுகாதார நிலைமைகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆண்குழந்தை ஒன்று 2023 ஆம் ஆண்டு பிறந்து இருந்தால் 81 வயது தொடக்கம் 90 வயது வரை எதிர்காலத்தில் வாழக்கூடியதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் ஜெர்மனியில் ஆண், பெண்களின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளதாக, புதிய புள்ளிவிபர தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version