நாட்டின் பாதுகாப்பு செலவீனங்களை அதிகரிக்கும் சுவிட்சர்லாந்து அரசாங்கம்!
சுவிட்சர்லாந்து அராசாங்கம் நாட்டின் பாதுகாப்பு செலவீனங்களை உயர்த்த திட்டமிட்டுள்ளது.
இதன்படி அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான பாதுகாப்பு செலவீனங்கள் 19 சதவீதத்தால் உயர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள போர்கள் உட்பட உலகளாவிய உறுதியற்ற தன்மையின் அதிகரிப்புகளை கருத்தில் கொண்டு மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ செலவினங்களுக்கான நடுத்தர மற்றும் நீண்ட தூர கணிப்புகளை வகுத்த பாதுகாப்பு அமைச்சர் வயோலா அம்ஹெர்ட், கடந்த 30 ஆண்டுகளில் செலவுக் குறைப்பு நடவடிக்கைகளின் விளைவாக, “இராணுவம் பலவீனமடைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
“அடுத்த 12 ஆண்டுகளில் இராணுவம் எவ்வாறு உருவாக வேண்டும் என்பதை நாங்கள் முதன்முறையாக சுட்டிக்காட்டுகிறோம்” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(Visited 8 times, 1 visits today)