நாளை விண்ணில் பாயும் ஆதித்தியா எல் – 01 விண்கலம்!
சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ள நிலையில், அடுத்த முயற்சியாக சூரியனுக்கு விண்கலம் ஒன்றை அனுப்ப இந்தியா தயாராகி வருகிறது.
இதன்படி ஆந்திரபிரதேசத்தில் உள்ள ஸ்ரீ ஹரிகோட்டா விண்கலத்தில் இருந்து நாளைய (02.08) தினம் ஆதித்யா எல் -01 என்ற விண்கலத்தை அனுப்பவுள்ளது.
சூரியனின் செயல்பாட்டை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பும் ஆதித்யா எல்-1, 04 மாதங்களுக்கு 1.5 மில்லியன் கிலோமீட்டர்கள் பயணித்து சூரியனின் அருகாமையை அடையும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
அத்துடன் அரோரா எனப்படும் பூமியைப் பாதிக்கக்கூடிய சூரியக் காற்றையும் ஆதித்யா விண்கலம் ஆய்வு செய்யும் எனவும், காலநிலையில் தற்போது ஏற்பட்டிருக்கின்ற மாற்றங்களை ஆய்வு செய்ய இது உதவியாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
மேலும் ஆதித்யா எல்-1 சூரிய ஆய்வுத் திட்டத்திற்கு $46 மில்லியன் செலவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.