மன்னார் நானாட்டான் ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மகோற்சவ தேர் திருவிழா!
மன்னார் நானாட்டான் ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மகோற்சவ தேர் திருவிழா இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (29) காலை 10 மணியளவில் ஆரம்பமாகி மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் திருக்கேதீச்சரத்திற்கு அடுத்து பெரிய ஆலயமாக காணப்படும் நானாட்டான் ஸ்ரீ செல்வ முத்துமாரி அம்மன் ஆலய மகோற்சவ தேர் திருவிழாவின் 14 நாள் தேர் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்களின் பங்குபற்றுதலுடன் சிறப்பாக இடம்பெற்றது.
இதன் போது ஆலயத்தைச் சுற்றி பக்தர்களால் காவடி எடுக்கப்பட்டு அங்கபிரதிஸ்ரை,செதில் காவடி,பறவை காவடி,கற்பூர சட்டி எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்கள் செலுத்தப்பட்டது
பின்னர் அம்பிகையின் சிலை தேரில் ஏற்றப்பட்டு நானாட்டான் வீதி சுற்றுவட்ட பகுதியூடாக பக்தர்களால் பக்தி பூர்வமாக ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.
(Visited 11 times, 1 visits today)