வேலை நிறுத்தத்தை கைவிட்ட இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம்
ரயில் நிலைய அதிபர்கள் இன்று தங்களது வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட முடிவு செய்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
புகையிரத நிலைய அதிபர்கள் நேற்று மாலை 4.30 மணி முதல் அனைத்து பயணச்சீட்டு கடமைகளிலிருந்தும் விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர்
எவ்வாறாயினும், புகையிரத சேவையில் எவ்வித இடையூறும் ஏற்படாது என தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
அமைச்சருடனான கலந்துரையாடலின் போது தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் நேற்று எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.
புகையிரத நிலைய அதிபர்கள் பதவி தொடர்பான பிரச்சினைகளை முன்வைத்து உடனடியாக தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.
எவ்வாறாயினும், புகையிரத நிலைய அதிபர்களின் பதவி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் அதிகாரிகளிடம் இருந்து பலமுறை கோரிக்கை விடுத்தும் சாதகமான பதில் கிடைக்காததால் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்ததாக சங்கத்தின் தலைவர் சுமேதா சோமரத்ன தெரிவித்துள்ளார்.