ஐபிஎல் ஏலத்தில் இலங்கையில் இருந்து 8 வீரர்கள் போட்டி
உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் ஏலத்திற்கு வழங்கப்படும் வீரர்களின் பட்டியலை போட்டி ஏற்பாட்டாளர்கள் இன்று வழங்கினர்.
இந்த ஏலத்தில் 333 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர், அதில் 214 வீரர்கள் இந்திய வீரர்கள்.
ஏலம் விடப்பட உள்ள 119 வெளிநாட்டு வீரர்களில் 8 பேர் இலங்கை வீரர்கள்.
இலங்கை வீரர் ஒருவருக்கு கொடுக்கப்பட்ட அதிகபட்ச ஏலத் தொகை 1.5 கோடி ரூபாய்.
வனிந்து ஹசரங்க அதே பெறுமதியான பிரிவில் இருந்து ஏலத்தில் விடப்பட்டுள்ளார்.
ஏனைய 7 வீரர்களும் 50 இலட்சம் இந்திய ரூபா பிரிவில் இம்முறை ஏலத்தில் இடம்பெற்றுள்ளனர்.
குசல் மெண்டிஸ், டில்ஷான் மதுஷங்க, சரித் அசலங்க, தசுன் ஷானக, துஷ்மந்த சமிர, லஹிரு குமார் மற்றும் நுவன் துஷார ஆகியோர் ஐபிஎல் ஏலத்தில் இடம் பெற்றுள்ள இலங்கையைச் சேர்ந்த மற்றைய வீரர்கள் ஆவர்.