இலங்கையில் கொலை சம்பவம் ஒன்றில் தொடர்புடைய 6 பேருக்கு மரண தண்டனை

நாரஹேன்பிட்டி பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய வழக்கின் பிரதிவாதிகள் 6 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு, நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் மரண வீடொன்றில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் தீவிரமடைந்ததையடுத்து, ஒருவரைக் கொலை செய்து மற்றுமொருவரைக் காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட ஆறு பிரதிவாதிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இவ்வாறு மரண தண்டனை விதித்துள்ளது.
நீண்ட விசாரணையின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே இந்தத் தீர்ப்பை வழங்கினார்.
(Visited 38 times, 1 visits today)