இஸ்ரேல்-ஹமாஸ் போர்! பலியான பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 38,240 ஆக அதிகரிப்பு

இஸ்ரேல்-ஹமாஸ் போர் மோதல்களால், உயிரிழந்த பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 38,240 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நோயுற்றவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் தங்கியுள்ள முகாம் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹமாஸ் அமைப்பின் தலைவர் ஒருவரை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
(Visited 16 times, 1 visits today)