பிரான்ஸ் தலைநகரில் இருந்து வெளியேற்றப்பட்ட 344 அகதிகள்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இருந்து 344 அகதிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பாரிஸின் 18 ஆம் வட்டாரத்தின் நகரசபை கட்டிடத்தின் முற்றத்தில் சிறிய கூடாரங்கள் அமைத்து தங்கியிருந்த அகதிகளே இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பெண்கள், சிறுவர்கள், ஆண்கள் என மொத்தமாக 344 பேர் வெளியேற்றப்பட்டிருந்தனர்.
அவர்கள் கடந்த இரண்டு நாட்களாக அங்கு தங்களது இரவு நேரத்தை கழிக்கின்றனர். தங்குமிடம், போதிய சுகாதாரமின்மை காரணங்களினால் அவர்களை வெளியேற்ற பொலிஸார் தீர்மானித்தனர்.
அதையடுத்து, பரிஸ் பொலிஸார் அவர்களோடு Utopia 56 எனும் தன்னார்வ தொண்டு நிறுவனமும் இணைந்து இந்த வெளியேற்றத்தை மேற்கொண்டனர்.
அவர்கள் அனைவரும் இல் து பிரான்சின் வெவ்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
(Visited 8 times, 1 visits today)