25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!
வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதில் 19 விமானங்கள் தைவான் ஜலசந்தியின் வான் பரப்பிற்குள் நுழைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், சீனாவின் இந்த நடவடிக்கைக்கு தைவான் போர் விமானங்கள், கப்பல்கள், மற்றும் கடலோர காவல் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் மூலம் பதிலடி கொடுத்ததாக பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை அச்சுறுத்தும் வகையில் தைவானின் சாம்பல் மண்டலத்தில் ஊடுறுவும் நடவடிக்கைகளை சீனா தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும் தைவானை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.