தென் கொரியாவில் சீரற்ற காலநிலையில் சிக்கி 22 பேர் உயிரிழப்பு!
தென் கொரியாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
தென்கொரியாவில் ஜுலை 09 முதல் கனமழை பெய்து வருகிறது. இது கடந்த மூன்று நாட்களாக தீவிரமடைந்துள்ளது.
வடக்கு சுங்சியோங் மாகாணத்தில் உள்ள அணை ஒன்று இன்று (15) காலை நிரம்பி வழிந்ததையடுத்து, ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கோசன் அணைக்கு 2,700 டன்னுக்கும் அதிகமான நீர் பாய்ந்தது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின்படி, நிலச்சரிவுகளில் சிக்கி ஐந்துபேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் இரண்டு வீடுகள் மண்ணில் புதையுண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
(Visited 18 times, 1 visits today)