கடும் நெருக்கடியில் இஸ்ரேல் – இராணுவ வீரர்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை
இஸ்ரேலில் இராணுவ வீரர்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலை அடுத்து, போர்க்காலப் படை வீரர்கள் சுமார் 300,000 பேர் சண்டையிட அழைக்கப்பட்டனர். அவர்களில் 18 சதவீதமானோருக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்க வேண்டிய 40 வயதுக்கும் மேற்பட்ட நபர்களாகும். இஸ்ரேலில் 18 வயதுக்கும் மேற்பட்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும் இராணுவச் சேவை கட்டாயமாகும். இஸ்ரேல் தற்போது காஸாவிலும் லெபனானிலும் போரில் ஈடுபட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரிலிருந்து காஸாவில் 367 […]