அறிவியல் & தொழில்நுட்பம்

நீண்ட நாட்களாக பேஸ்புக் கணக்கை பயன்படுத்தாதவரா நீங்கள்? இதை செய்யுங்கள்

  • September 29, 2024
  • 0 Comments

நீண்ட நாட்களாக பேஸ்புக் பயன்படுத்தவில்லை என்றால் உங்கள் அக்கவுண்ட் டிஆக்டிவேட் செய்யப்படும். அதை மீண்டும் ஆக்டிவேட் செய்வது எப்படி என்று பார்ப்போம். முதலில் உங்கள் மொபைல் ஃபோனில் பேஸ்புக் ஆப்பிற்கு செல்லவும். 2. உங்கள் ப்ரொபல் ஐகானை கிளிக் செய்யவும். 3. செட்டிங்ஸ் சென்று ப்ரைவசி ஆப்ஷன் செல்லவும். Facebook information பக்கம் செல்லவும். 4. இங்கு டிஆக்டிவேட் என்று இருக்கும் அதை ஆக்டிவேட் என்று மாற்றவும்.

ஐரோப்பா

ஜெர்மனி வாழ் மக்களுக்கு கிடைக்கவுள்ள வசதி

  • September 29, 2024
  • 0 Comments

ஜெர்மனி தலைநகர் பெர்லின் முழுவதும் 2028 ஆம் ஆண்டளவில் பைபர் ஒப்டிக் இணையத்தை அணுக முடியும் என பொருளாதார அமைச்சர் பிரான்சிஸ்கா கிபி உறுதிப்படுத்தியுள்ளார். இது ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டதை விட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகப்படுத்தப்படவுள்ளமை குறித்து மகிழ்ச்சியளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டில், பெர்லினில் பைபர் ஒப்டிக் இணைப்பு சேவையை இரட்டிப்பாகியுள்ளது, நகரத்தின் 34 சதவிகிதம் இப்போது அணுகலைக் கொண்டுள்ளது. பெர்லின் பொருளாதார அமைச்சரும், முன்னாள் மேயருமான பிரான்சிஸ்கா கிபி, இந்த முன்னேற்றம் என்பது, முதலில் […]

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்பின் பிரச்சாரத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

  • September 29, 2024
  • 0 Comments

குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்பின் பிரச்சாரத்திற்கு எதிராக ஊடுருவல் மற்றும் இணைய உளவு பார்த்ததாக மூன்று ஈரானியர்கள் மீது அமெரிக்க கிராண்ட் ஜூரி குற்றஞ்சாட்டியுள்ளது. அமெரிக்காவில் ஈரான், சீனா மற்றும் ரஷ்யாவின் தேர்தல் தலையீடுகள் குறித்த கவலைகள் காரணமாக இந்த குற்றப்பத்திரிகை முன்வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கில் நேற்று அமெரிக்காவில் உள்ள மத்திய அரசு வழக்கறிஞர்கள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த ஹேக்கர்கள் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பிரச்சார உறுப்பினர்களை […]

இலங்கை

இலங்கையில் ஊழலில் ஈடுபட்ட அரச அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுக்க தயாராகும் அரசாங்கம்

  • September 29, 2024
  • 0 Comments

இலங்கையில் அரசாங்கத்தின் அதிகாரிகளுக்கு எதிராக முன்வைக்கப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் முறையான விசாரணை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். மல்வத்து – அஸ்கிரிய பீடத்தினரைச் சந்தித்து ஆசி பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய அரசாங்கத்தின் கீழ், உயர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள பல அதிகாரிகள் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. தற்போது, வெளியிலிருந்து அரச அதிகாரிகளைக் கொண்டு வருவதற்கு […]

ஆஸ்திரேலியா

போலி காதலால் ஏமாற்றப்படும் ஆஸ்திரேலியர்கள் – பெருந்தொகை பணத்தை இழந்த மக்கள்

  • September 29, 2024
  • 0 Comments

கடந்த ஆண்டு பல்வேறு மோசடிகளால் ஆஸ்திரேலியர்கள் 481 மில்லியன் டொலர்களை இழந்துள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. Scamwatch தரவுகளின்படி, 2023 ஆம் ஆண்டில் 301,791 மோசடிகள் பதிவாகியுள்ளன மற்றும் முந்தைய ஆண்டை விட 26 சதவீதம் அதிகரித்துள்ளது. இவ்வாறு, பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள் விழும் மோசடிகளில், வேலைவாய்ப்பு தொடர்பான மோசடிக்கு அதிக மதிப்பு இருப்பது சிறப்பம்சமாகும். இதன்படி, கடந்த வருடம் இடம்பெற்ற வேலைவாய்ப்பு தொடர்பான நிதி மோசடிகளின் எண்ணிக்கை 4824 ஆகவும், இதன் மூலம் அவுஸ்திரேலியர்கள் 24.7 மில்லியன் […]

அறிந்திருக்க வேண்டியவை

பூமிக்கு 2வது நிலவு – இன்று வானில் ஏற்படும் அதிசயம்

  • September 29, 2024
  • 0 Comments

பூமியின் நிலவுக்கு நாளை புதிய நண்பர் கிடைக்க உள்ள நிலையில் அதனை 2-வது நிலவு என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பூமி இரண்டாவது நிலவைப் பெற உள்ளது. 2024 PT5 என்று பெயரிடப்பட்ட ஒரு சிறிய சிறுகோள் – இன்று மற்றும் நவம்பர் 25 க்கு இடையில் சுமார் இரண்டு மாதங்களுக்கு பூமியை சுற்றி வர உள்ளது. அமெரிக்க வானியல் சங்கத்தின் ஆய்வுக் குறிப்புகளின்படி, 2024 PT5 பூமியின் தற்காலிக ‘மினி நிலவாக’ இருக்கும் என்று கூறியுள்ளது. அதாவது […]

விளையாட்டு

147 ஆண்டுகளில் முதல் முறையாக வரலாறு படைத்த ஜடேஜா!

  • September 29, 2024
  • 0 Comments

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் வீரராக ரவீந்திர ஜடேஜா ஜொலித்து வருகிறார். தற்போது அவர் வங்கதேச அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் களமாடி விளையாடி வருகிறார். இதில் சென்னையில் நடந்த முதல் போட்டியில் அவர் முதல் இன்னிங்சில் 2 விக்கெட் மற்றும் 2-வது இன்னிங்சில் 3 விக்கெட் என மொத்தமாக 5 விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டி வரும் ஜடேஜா, தற்போது, […]

ஆசியா

சீனாவில் பெண்ணுக்கு நடந்த அதிசயம் – மில்லியனில் ஒருவருக்கு நடக்கும் அரிய சம்பவம்

  • September 29, 2024
  • 0 Comments

சீனாவில் 2 கருப்பைகளோடு பிறந்த பெண் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்த அரிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அந்த அரியவகை நிலையுடன் பிறந்த அவருடைய கருப்பை ஒவ்வொன்றிலும் கரு உண்டாகியிருந்தது. உலகத்திலேயே 0.3 சதவீத பெண்களுக்கு மட்டுமே அப்படி ஒருநிலை ஏற்படும். அவற்றுள் 2 கருமுட்டைகள் இருப்பது அரிதாகும். வெற்றிகரமாகக் குழந்தைகளைப் பெற்றெடுப்பது அரிதினும் அரிதாகும். இம்மாதத் தொடக்கத்தில் அந்தப் பெண் ஓர் ஆண், ஒரு பெண் குழந்தையை ஈன்றெடுத்தார். இதற்கு முன் அவர் கர்ப்பமுற்றபோது அடையாளம் காணப்படாத […]

ஆசியா செய்தி

சிங்கப்பூரில் மூத்தோர் முடிந்தால் வேலைக்கு திரும்புமாறு கோரிக்கை

  • September 29, 2024
  • 0 Comments

சிங்கப்பூரில் அதிகமான மூத்தோர் முடிந்தால் வேலைக்குத் திரும்பவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மனிதவள அமைச்சர் Tan See Leng இதனை கேட்டுக்கொண்டிருக்கிறார். அதற்கு அரசாங்கம் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று அவர் கூறினார். எடுத்துக்காட்டுக்கு, 55 வயதுக்கு மேற்பட்டவர்களை வேலையில் சேர்த்துக்கொள்வதற்கு முதலாளிகளை ஊக்குவிக்கும் புதிய மசோதா அடுத்த 2 மாதங்களில் தாக்கல் செய்யப்படும் என்பதை அவர் சுட்டினார். வயதை வைத்துப் பாரபட்சம் காட்டுவதைத் தடுக்கும் புதிய வேலையிட வழிகாட்டிகளும் இவ்வாண்டு நடப்புக்கு வரும். சமூகத்தோடு இணைந்திருக்கும்போது நீண்ட ஆயுளோடு, […]

இலங்கை செய்தி

இலங்கையில் ரணில் ஆரம்பித்தவற்றையே அனுர செய்கிறார் – முன்னாள் அமைச்சர் தகவல்

  • September 29, 2024
  • 0 Comments

தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, கடந்த அரசாங்கத்தின் போது ஆரம்பிக்கப்பட்ட பல வேலைத்திட்டங்களை மீள முன்னெடுப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக முன்னாள் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். குறிப்பாக கடற்றொழிலாளர்களுக்கான எரிபொருள் மானியம், உர மானிய தொகை அதிகரிப்பு மற்றும் இந்தியக் கடன் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சூரிய படலங்களைப் பகிர்ந்தளித்தல் உள்ளிட்ட செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு புதிய ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். கடந்த காலங்களில் இந்த திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் தேர்தல் காரணமாக, தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அவை நிறுத்தப்பட்டன. […]