ஆப்பிரிக்கா

ஆப்பிரிக்காவில் கொட்டிக்கிடக்கும் தங்கம் – அரபு நாடுகளுக்குப் பல நூறு டன் தங்கம் கடத்தல்

  • May 31, 2024
  • 0 Comments

ஆப்பிரிக்காவிலிருந்து ஐக்கிய அரபு சிற்றரசுகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் நூற்றுக்கணக்கான டன் தங்கம் கடத்தப்படுவதாகத் தகவல் வெளிவந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளுக்கு 2,500 டன்னுக்கு அதிகமான தங்கம் கடத்தப்பட்டுள்ளது. Swissaid அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கடத்திய தங்கத்தின் மதிப்பு 115 பில்லியன் டொலரைவிட அதிகமாகும். 2022ஆம் ஆண்டு 435 டன் தங்கம் கடத்தப்பட்டதாக Swissaid குறிப்பிட்டுள்ளது.அதில் 405 டன் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளுக்கு அனுப்பப்பட்டது. கடத்தப்படும் தங்கம் குறிப்பாகத் துபாய்க்குச் […]

செய்தி வாழ்வியல்

அதிக கலோரிகளை எரிக்கும் 5 நிமிட நடைபயிற்சி

  • May 31, 2024
  • 0 Comments

இன்றைய காலகட்டத்தில், பெரும்பாலானோர் தங்கள் ஆரோக்கியத்த்தின் மீது அதிக கவனம் செலுத்துகிறார்கள். குடியிருப்புகளில் உள்ள பூங்காக்கள், கிளப்புகள் மற்றும் சாலைகளில் காலையில், மக்கள் அதிக அளவில் நடந்து செல்வதைக் காணலாம். சிலர் காலையிலும் மாலையிலும் நீண்ட நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனர். நடைபயிற்சி முழு உடலுக்கும் ஒரு பயிற்சி அளிப்பத்தால், சிறந்த உடற்பயிற்சியாக கருதப்படுகிறது. நடைபயிற்சி (Walking) என்பது நோயின்றி வாழ மிகவும் முக்கியமான பயிற்சி. சிறந்த உடற்பயிற்சியாகக் கருதப்படும் நடைபயிற்சியின் மூலம் நீங்கள் ஆயுள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க […]

ஐரோப்பா

ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தல் : சிக்கலில் ஜேர்மனி!

  • May 31, 2024
  • 0 Comments

27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப்பெரிய ஒற்றை தேசியக் குழுவான ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ஜூன் 9 அன்று 720 இடங்களில் 96 இடங்களை நிரப்ப அந்நாட்டின் வாக்காளர்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் ஜேர்மன் அரசியல் ஒரு  நிலையற்ற நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2021 ஆம் ஆண்டின் பிற்பகுதியில்  ஏஞ்சலா மேர்க்கலின் 16 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த பிறகு இது நாடு தழுவிய முதல் வாக்கெடுப்பு ஆகும். இந்த ஐரோப்பிய தேர்தல் ஒரு பொருளாதார நெருக்கடியின் […]

இலங்கை

இலங்கையில் கொலையில் முடிந்த வாய்த்தர்க்கம்

  • May 31, 2024
  • 0 Comments

நிட்டம்புவ – திஹாரி பகுதியில் நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். முச்சக்கர வண்டி நிறுத்தும் இடத்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலில் முடிவடைந்தமையே கொலைக்கான காரணமென பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் இரும்பினால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். நிட்டம்புவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் விசா தொடர்பில் பிரதமர் வெளியிட்ட உத்தரவு

  • May 31, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் விசா இரத்துச் சம்பவங்களைச் சமாளிக்க புதிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். விசா ரத்துச் சம்பவங்களை மீளாய்வு செய்யும் போது சமூக பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென பிரதமர் குறிப்பிட்டுள்ளார். 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் குடிவரவு அமைச்சர் பிறப்பித்த உத்தரவு காரணமாக குற்றவாளிகள் குழு ஆஸ்திரேலியாவில் தங்க அனுமதிக்கப்பட்டது தெரியவந்ததும் மத்திய அரசு கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. குற்றவாளியின் விசாவை திரும்பப் பெறுவதா அல்லது திரும்பப் பெறுவதா என்பதைக் […]

ஐரோப்பா

UKவில் ஹீத்ரோ விமான நிலையத்தின் எல்லைபடை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

  • May 31, 2024
  • 0 Comments

பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான எல்லைப் படை அதிகாரிகள் இந்த வாரம் வேலைநிறுத்தம் செய்யவுள்ளனர். இதன்படி மே- 31, ஜுன் 01,02 ஆகிய திகதிகளில் அவர்கள் வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். கணிப்பின்படி 500இற்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்கள் வெளிநடப்பு செய்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஜூன் 4 முதல் மூன்று வாரங்களுக்கு கூடுதல் நேரம் வேலை செய்ய மறுப்பார்கள் எனவும் கூறப்படுகிறது. பட்டியல் விவகாரம் காரணமாக இந்த வேலை நிறுத்தம் நடந்துள்ளது. எங்கள் உறுப்பினர்களுக்கு பயனளிக்கும் பட்டியலில் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

WhatsAppஇல் அறிமுகமாகும் புதிய அம்சம்!

  • May 31, 2024
  • 0 Comments

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் புதிய ஏ.ஐ அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் வாட்ஸ்அப்-ல் ஏ.ஐ இமேஜ் உருவாக்க புதிய அம்சம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதற்கு பிரத்யேக ஐகானை கொண்டு வருகிறது. இந்த அம்சம் தற்போது சோதனை அடிப்படையில் பீட்டா பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதே போல் வாட்ஸ்அப்-ல் மெட்டா சாட்போர் அறிமுகம் செய்யப்பட்டு பல்வேறு பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதம் முதல் இது வழங்கப்பட்டு வருகிறது. வாட்ஸ்அப்-ல் ஏ.ஐ […]

உலகம்

அமெரிக்காவில் மினியாபோலிஸ் பகுதியில் துப்பாக்கிச்சூடு : நால்வர் பலி!

  • May 31, 2024
  • 0 Comments

அமெரிக்காவின் மினியாபோலிஸில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து குறித்த பகுதியினூடாக பயணிப்பதை தவிர்க்குமாறு மக்களிடம் காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் கண்டறிப்படவில்லை என்பதுடன், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அதிகாரிக்ள முன்னெடுத்து வருகின்றனர்.

விளையாட்டு

விமர்சனங்களை பற்றி கவலையில்லை – இந்திய வீரர் ரியான் பராக்

  • May 31, 2024
  • 0 Comments

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரராக விளையாடி வரும் ரியான் பராக் சமீபத்தில் பிடிஐக்கு (PTI) அளித்த பேட்டியை, ஈஎஸ்பிஎன் இன்ஃபோ (ESPN Info) வெளியிட்டுள்ளனர். நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய இளம் வீரர் ரியான் பராக் இந்த தொடரில் 16 போட்டிகளில் விளையாடி 149.21 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 573 ரன்களை எடுத்துள்ளார், அதில் 4 அரை சதங்களும் அடங்கும். மேலும், லீக் போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர் பிளே-ஆஃப் […]

ஆசியா

சீனா அறிமுகப்படுத்தியுள்ள திகிலூட்டும் வேன் : கருத்து கணிப்பில் அம்பலமான உண்மை!

  • May 31, 2024
  • 0 Comments

உலகெங்கிலும் மரணதண்டனைகள் கடுமையாக அதிகரித்து வருகிறது.  மரண தண்டனையை நிறைவேற்றுவதில் சீனா முன்னணியில் உள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபையின் புதிய அறிக்கையின்படி, கடந்த ஆண்டு 16 நாடுகளில் 1,153 மரணதண்டனைகள் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டு 883 ஆக இருந்தது. எவ்வாறாயினும் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்களைக் கொல்வதாக மதிப்பிடப்பட்ட சீனா போன்ற இரகசிய நாடுகளும், கொரிய மொழியைப் பயன்படுத்தாதவர்களுக்கு மரண தண்டனையை உள்ளடக்கிய புதிய சட்டத்தை அறிமுகப்படுத்திய வட கொரியாவும் இந்த புள்ளிவிவரங்களில் […]