ஆசியா

சிங்கப்பூரில் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட 5 வாகனங்கள்

  • January 31, 2024
  • 0 Comments

சிங்கப்பூரில் 5 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 56 வயதான ட்ரக் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று குடிமைத் தற்காப்புப் படை துணை மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் இரண்டு பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் ஜனவரி 29ஆம் தேதியன்று பிற்பகல் Choa Chu Kang Way இல் நடந்தது. இந்த விபத்து குறித்து பிற்பகல் 2 மணி அளவில் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்தில் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட எச்சரிக்கை!

  • January 31, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் Booking.com இணையத்தளத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் மோசடியான முன்பதிவுகள் அதிகரித்துள்ளதாக ஆஸ்திரேலிய நுகர்வோர் சேவை ஆணையம் தெரிவித்துள்ளது. இதன்படி, 2023ஆம் ஆண்டு தொடர்புடைய மோசடிகள் காரணமாக ஆஸ்திரேலியர்களுக்கு ஏற்பட்ட நட்டம் ஒரு இலட்சத்து முந்நூற்று முப்பத்தேழாயிரம் டொலர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. புக்கிங்.காம் இணையதளம் மூலம் பிரபல தங்கும் விடுதி வழங்குனர்களின் கணக்குகளை சைபர் கிரைம் குற்றவாளிகள் மோசடியாக அணுகி உரிய உரிமையாளர்கள் போல் நடித்து அவர்களுக்கு பணம் கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. Booking.com மூலம் இதுபோன்ற மோசடிகள் […]

விளையாட்டு

இந்திய அணிக்கு இங்கிலாந்து கொடுத்த எச்சரிக்கை

  • January 31, 2024
  • 0 Comments

சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் இந்திய அணிக்கு இங்கிலாந்து எச்சரிக்கை கொடுத்துள்ளதாக முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. அந்த அணியின் வெற்றியில் ஆலி போப் விளாசிய சதமும், சுழற்பந்து வீச்சில் டாம் ஹார்ட்லி 2-வது இன்னிங்ஸில் வீழ்த்திய 7 விக்கெட்களும் முக்கிய பங்கு […]

அறிவியல் & தொழில்நுட்பம்

மனித மூளைக்குள் சிப் – எதற்காக இந்த ஆராய்ச்சி?

  • January 31, 2024
  • 0 Comments

டெஸ்லா மற்றும் SpaceX தலைமை நிர்வாக அதிகாரியான எலோன் மஸ்க் நியூராலிங்க் (Neuralink) என்ற மனித மூளை – கணினி இடைமுக நிறுவனத்தை நடத்தி வருகிறது. இந்த நிறுவனம், அதன் சிப்பை முதல் முறையாக மனித மூளைக்குள் வெற்றிகரமாக செலுத்தியிருப்பதாகவும், சோதனைக்குட்பட்டவர் தற்போது நன்றாக முன்னேற்றம் கண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனை எலான் மஸ்க் சமூக வலைதளம் மூலம் அறிவித்தார். என்ன தொழில்நுட்பம் இது? நியூராலிங்க் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு டெலிபதி (Telepathy) என்று அழைக்கப்படுகிறது. இதன்மூலம், […]

இலங்கை

இலங்கையில் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்துவதற்காக புதிய சட்டம்

  • January 31, 2024
  • 0 Comments

இலங்கையில் உள்ள அதிவேகநெடுஞ்சாலைகளைப் பயன்படுத்துவதற்கான புதிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளைக் கொண்ட புதிய வர்த்தமானியை அறிமுகப்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. குறைந்தபட்ச வேக வரம்பு உள்ளிட்ட புதிய வர்த்தமானி அறிவித்தல் இன்னும் இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், “தனிப்பட்ட பண்புகள் இன்றி நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் […]

ஐரோப்பா

36 மணி நேரம் கடும் விரதம் – இளமையின் இரகசியத்தை வெளிப்படுத்திய பிரித்தானிய பிரதமர்

  • January 31, 2024
  • 0 Comments

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், வாரத்துக்கு 36 மணி நேரம் கடுமையான விரதம் ஒன்றைக் கடைப்பிடிப்பதாக செய்தி செய்தி வெளியாகியுள்ளது. ரிஷி சுனக், சமச்சீர் வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக வாரத்திற்கு ஒரு முறை விரதம் இருப்பது எனக்கு ஒரு முக்கியமான ஒழுக்கம் என்று பிரதமர் கூறியுள்ளார். பிரதமர் ஒவ்வொரு வாரத்தின் தொடக்கத்திலும் 36 மணிநேரம் எதையும் சாப்பிடுவதில்லை என குறிப்பிட்டுள்ளார். “பொதுவான சீரான வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக ஒவ்வொரு வாரத்தின் தொடக்கத்திலும் நான் சில […]

ஐரோப்பா

கடவுச்சீட்டின்றி ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்கு பயணித்தவருக்கு 5 வருட சிறைத்தண்டனை

  • January 31, 2024
  • 0 Comments

டென்மார்க்கிலிருந்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகருக்குப் பயணம் மேற்கொண்ட Sergey Ochigava என்பவருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. கடவுச்சீட்டு, பயணச் சீட்டு, விசா எதுவுமின்றி பயணம் மேற்கொண்டதற்கான குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். 46 வயது ஒச்சிகாவா ரஷ்யாவைச் சேர்ந்தவர் எனவும் அவர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு (2023) நவம்பர் மாதம் அவர் விமானத்தில் மறைந்திருந்து பயணம் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது. விமானம் நவம்பர் 4ஆம் தேதி லாஸ் ஏஞ்சலிஸில் தரையிறங்கியதும் […]

செய்தி

பிரான்ஸ் மக்களுக்கு நாளைய தினம் முதல் காத்திருக்கும் நெருக்கடி

  • January 31, 2024
  • 0 Comments

பிரான்ஸில் நாளைய தினம் முதல் மின்சாரக்கட்டணம் அதிகரிக்கப்பட உள்ளதாக பொருளாதார அமைச்சர் Bruno Le Maire அறிவித்துள்ளார். மின்சாரக்கட்டணம் 9.8% சதவீதத்தால் அதிகரிக்க உள்ளது. பொருளாதார அமைச்சர் இதனை அறிவித்துள்ளார். “இரண்டு பிள்ளைகளுடன் வசிக்கும் நால்வர் கொண்ட குடும்பம் ஒன்றுக்கு சராசரியாக 18 யூரோக்கள் மாதம் கட்டணம் அதிகமாக செலுத்த நேரும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு ஒழுங்குபடுத்தப்பட்ட விகித முறையில் கட்டணம் செலுத்துபவர்களுக்கான ( 9.3 மில்லியன் மக்கள்) அதிகரிப்பாகும். அதேவேளை, ஒழுங்குபடுத்தப்பட்ட விகிதம் […]

இலங்கை

இலங்கையில் TIN இல்லாத நபர்களுக்கு அபராதமா? வெளியான முக்கிய தகவல்

  • January 31, 2024
  • 0 Comments

இலங்கையில் TIN அல்லது வரி அடையாள எண்ணைப் பெறாத நபர்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கை உள்நாட்டு இறைவரி திணைக்களத்தால் இடைநிறுத்தப்பட்டுள்ளது. நிதியமைச்சின் ஆலோசனையின் பிரகாரம் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 18 வயதிற்கு மேற்பட்ட ஒவ்வொரு குடிமகனும் வரி கோப்பினை ஆரம்பிக்க வேண்டியது கட்டாயம் என அரசாங்கம் தீர்மானித்திருந்தது. ஜனவரி முதலாம் திகதி முதல் இந்த நடவடிக்கையை கட்டாயமாக்குவதற்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. உரிய வரி அடையாள எண்ணைப் பெறாதவர்களுக்கு 50,000 ரூபா அபராதம் விதிக்கப்படும் என அப்போது அறிவிக்கப்பட்டது. […]

விளையாட்டு

துணைக் காவல் கண்காணிப்பாளராக இந்திய கிரிக்கெட் வீராங்கனை நியமனம்

  • January 30, 2024
  • 0 Comments

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனை தீப்தி சர்மா. தற்போது இந்திய அணியில் ஆல்ரவுண்டராக அவர் ஜொலித்து வருகிறார். மேலும் இந்திய அணியின் மேட்ச் வின்னராகவும் உருவெடுத்துள்ளார். டி20 சர்வதேசப் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற சாதனையை சமீபத்தில் தீப்தி சர்மா படைத்தார். ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளை பொறுத்தவரையிலும், டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே இந்தியர் என்ற பெருமையையும் தீப்தி சர்மா பெற்றார். இந்நிலையில் தீப்தி சர்மாவின் […]