இந்தியா விளையாட்டு

60 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தான் செல்லும் இந்திய அணி… பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் !

  • January 30, 2024
  • 0 Comments

60 ஆண்டுகளுக்கு பிறகு டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் விளையாட செல்லும் இந்திய அணிக்கு பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையிலான எல்லைப் பிரச்சினை நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்தே நீடித்து வருகிறது. அதிலும் எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதல் என்பது தொடர்கதையாக உள்ளதால், இந்தியா பாகிஸ்தானுடனான பல்வேறு உறவுகளை துண்டித்து வைத்துள்ளது. அதில் விளையாட்டு போட்டிகளும் அடங்கும். கிரிக்கெட், ஹாக்கி, டென்னிஸ் என எந்த விளையாட்டு போட்டிகளிலும் இந்திய அணி […]

தமிழ்நாடு

தூத்துக்குடி -மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே மனைவியை சரமாரியாக வெட்டிய கணவன்…!

  • January 30, 2024
  • 0 Comments

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் உள்ளிட்ட மூன்று பேரை பொலிஸார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி, புதுக்கோட்டை அருகே உள்ள அல்லிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் குணா. இவரது மனைவி அமராவதி(28). இவர்கள் இருவருக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு வீட்டுக்குச் செல்வதற்காக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே உள்ள கோரம்பள்ளம் பேருந்து […]

உலகம்

செர்பியாவில் பள்ளி துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலி : சிறுவனின் பெற்றோர்களிடம் விசாரணை

கடந்த ஆண்டு செர்பியாவில் பள்ளி துப்பாக்கிச் சூட்டில் 10 பேரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட 13 வயது சிறுவனின் பெற்றோர் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளைப் பாதுகாக்கத் தவறியதாகக் குற்றம் சாட்டப்பட்டனர். தற்போது மனநல மருத்துவமனையில் உள்ள இளைஞன், தனது பெல்கிரேட் பள்ளியில் தனது வகுப்பு தோழர்கள் ஒன்பது பேர் மற்றும் ஒரு பாதுகாவலரை தனது தந்தையின் ஆயுதங்களால் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது. தந்தை சிறுவனுக்கு துப்பாக்கிச் சூடு நடத்த பயிற்சி அளித்ததாகவும் வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். […]

இலங்கை

காலி – மாத்தறை பிரதான வீதியில் கோர விபத்தில் சிக்கி இரு வௌிநாட்டு பிரஜைகள் பலி!

  • January 30, 2024
  • 0 Comments

காலி – மாத்தறை பிரதான வீதியில் மிதிகம பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும், பஸ் ஒன்றும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வெளிநாட்டு பிரஜைகள் இருவர் உயிரிழந்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிதிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

வட அமெரிக்கா

ராமர் கோவில் திறப்பு விழாவை கொண்டாடும் விதமாக அமெரிக்காவில் வானில் பறக்கவிடப்பட்ட ‘ஜெய் ஸ்ரீராம்’ பேனர்

  • January 30, 2024
  • 0 Comments

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் திறப்பு விழா கடந்த 22திகதி கோலாகலமாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது அயோத்தி ராமர் கோவிலுக்கு தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை கொண்டாடும் விதமாக அமெரிக்காவின் ஹூஸ்டன் மாகாணத்தில் வசிக்கும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் சார்பில் நேற்று விமானம் மூலம் ‘பிரபஞ்சம் சொல்கிறது ஜெய் ஸ்ரீராம்’ என்ற பேனர் வானில் […]

இலங்கை

அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராக எதிர்ப்பு ஊர்வலம் : கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சஜித் வருகை

சமகி ஜன பலவேகய (SJB) ஆர்ப்பாட்டத்தின் போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உட்பட இருவர் அனுமதிக்கப்பட்ட பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் சஜ்த் பிரேமதாச இன்று (ஜன. 30) கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விஜயம் செய்துள்ளார். இன்று அதிகாலை, சமகி ஜன பலவேகய எதிர்ப்பாளர்களைக் கலைக்கும் முயற்சியில் பொலிசார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர் பீரங்கிகளை வீசியதில் காயமடைந்த நபர் ஒருவர் வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறிது நேரத்தின் பின்னர், ஆர்ப்பாட்ட பேரணியின் போது முன்னாள் […]

ஐரோப்பா

HSBC வங்கிக்கு 57.4 மில்லியன் பவுண்டுகள் அபராதம் விதிப்பு!

  • January 30, 2024
  • 0 Comments

ஐரோப்பாவின் மிகப்பெரிய வங்கியான HSBC வங்கிக்கு 57.4 மில்லியன் பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த வங்கியானது வாடிக்கையாளர்களின் வைப்புத்தொகையை போதுமான அளவு பாதுகாக்க தவறியமைக்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கட்டுப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். லண்டனை தளமாகக் கொண்ட எச்எஸ்பிசி ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் இரண்டு யூனிட்கள் வடிவமைக்கப்பட்ட விதிகளை மீறியதாக தெரிவிக்கப்படுகிறது. அதாவது, வங்கிகள் தோல்வியடையும் போது வைப்புத்தொகையாளர்களைப் பாதுகாக்கத் தேவையான தகவல்களை கட்டுப்பாட்டாளர்கள் வைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் என்று இங்கிலாந்து வங்கியின் ஒரு […]

ஐரோப்பா

ஜார்ஜியாவின் அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கி பிரயோகம் : மூவர் பலி!

  • January 30, 2024
  • 0 Comments

ஜார்ஜியாவின் க்வின்னெட் கவுண்டியில் இன்று (30.01) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் மூவர்உயிரிழந்துள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பில் இடம்பெற்ற குறித்த துப்பாக்கிச்சூட்டில் தாக்குதல்தாரி தற்கொலை செய்துக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் உயிரிழந்த நிலையில், மற்றுமொரு பெண் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். துப்பாகிச்சூட்டுக்கான காரணம் வெளியாகாத நிலையில், புலனாய்வாளர்கள் தொடர்ச்சியாக ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கை

வாகன இறக்குமதி செய்ய அமைச்சுகளுக்கு அமைச்சரவை அனுமதி: விதிக்கப்பட்டுள்ள வரையறை

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு மற்றும் கல்வி அமைச்சுக்கான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அந்நியச் செலாவணி சந்தையில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கும் நடவடிக்கையாக கட்டுமான வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் தவிர மோட்டார் வாகனங்களின் இறக்குமதியை அரசாங்கம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. எவ்வாறாயினும், வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து மற்றும் கல்வி அமைச்சுக்கள் நிதியமைச்சிடம் சமர்ப்பித்த கோரிக்கைகளுக்கு கடந்த வருடம் டிசம்பர் மாதம் அமைச்சரவை […]

இலங்கை

இலங்கையில் முதுமையை தடுக்கும் மாத்திரை கண்டுப்பிடிப்பு!

  • January 30, 2024
  • 0 Comments

கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல் ஆராய்ச்சி பீடத்தால், இலங்கையில் முதன்முறையாக முதுமையை தடுக்கும் ஊட்டச்சத்து மாத்திரை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த மாத்திரையானது, இயற்கையான மூலப்பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்டுள்ளதகாகவும் தற்போது அந்த மூலப்பொருட்களை பற்றிய தகவல்களை வெளியிட முடியாது எனவும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல் பேராசிரியர் சமீர ஆர். சமரகோன் தெரிவித்துள்ளார். மேலும், இந்த முதுமையை தடுக்கும் மாத்திரையானது நீண்ட கால ஆய்விற்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் நான்கு மாதங்களுக்குள் அது பாவனைக்கு வெளிவர தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், […]