ஐரோப்பா

சுவிஸில் சரக்கு ரயில் போக்குவரத்து பாதிப்பு

சுவிட்சர்லாந்தில் சரக்கு ரயில் போக்குவரத்து பாதிக்கப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆண்டில் சுவிட்சர்லாந்தின் பல்வேறு ரயில் பாதைகள் புனரமைக்கப்பட உள்ளன. இதனால் சரக்கு ரயில் போக்குவரத்து அதிகளவில் வரையறுக்கப்பட உள்ளது. தற்காலிக அடிப்படையில் இவ்வாறு போக்குவரத்து பாதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. வாலாயிஸ் கான்டனிலிருந்து இத்தாலியின் மிலான் வரையிலான ரயில் பாதை மூன்று மாதங்களுக்கு மூடப்பட உள்ளது.

இலங்கை

“பிரஜா கரசர” தேசிய விருது வழங்கல் நிகழ்வு

கொழும்பில் நடைபெற்ற சமுர்த்தி “பிரஜா கரசர” தேசிய விருது வழங்கல் நிகழ்வில் தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் பிரதேச சமுதாய அமைப்பு (RCBO) மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தினையும் புகைத்தல் எதிர்ப்பு கொடி விற்பனையில் சிராஜ் நகர் (CBO) சமுதாய அடிப்படை அமைப்பு மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தினையும் பெற்று தேசிய மட்ட விருது வழங்கலில் விருதுகள் வழங்கப்பட்டன. தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் விருதுகளை பெற்ற உத்தியோகத்தர்கள் நேற்று (30) பிரதேச செயலகத்தில் வைத்து பாராட்டப்பட்டனர். […]

இலங்கை

பீஜி தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!

  • October 31, 2023
  • 0 Comments

தெற்கு பசிபிக் சமுத்திர  தீவு கூட்டங்களில் ஒன்றான பீஜி தீவுக் கூட்டத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று இன்று (31.10) பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கமானது,  ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட பொருள் இழப்பு போன்ற உடனடித் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.இதேபோன்ற அளவிலான நிலநடுக்கம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பிஜியில் ஏற்பட்டது.

இலங்கை

மலையக புகையிரத சேவைகள் பாதிப்பு

கொழும்பு பதுளை பிரதான புகையிரத விதியில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டதில் மலையகத்திற்கான புகையிரத சேவைகள் பாதிப்படைந்துள்ளன. இன்று (31) மாலை 4 மணியளவில் இச் சம்பவம் கொட்டகலை. மற்றும் தலவாக்கலை புகையிரத நிலையங்களுக்கு இடையில் இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து இன்று காலை பதுளை நோக்கி புறப்பட்டு சென்ற புகையிரதமே இவ்வாறு தடம் புரண்டுள்ளது. புகையிரதத்தினை தடம் அமர்த்துவதகான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் புகையிரத நிலையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை

போலி ஆவணங்கள் மூலம் தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்தவர்கள் வெளிநாடு செல்ல தடை!

  • October 31, 2023
  • 0 Comments

போலி ஆவணங்களை தயாரித்து தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்வது தொடர்பான நிறுவன உரிமையாளரும், அதற்கு ஒப்புதல் அளித்த இரண்டு மூத்த அரச அதிகாரிகளும் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர்கள் நாட்டை விட்டு வெளியேறத் தயாராக இருப்பதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பிரேரணையை சமர்ப்பித்ததை அடுத்து, மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, நிறுவனத்தின் உரிமையாளரான ‘அருண தீப்தி’ என அழைக்கப்படும் சுகத் ஜானக பெர்னாண்டோ, மருந்து கட்டுப்பாட்டு அதிகாரசபையின் பிரதம […]

ஐரோப்பா

மக்ரோனின் அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை

வாக்கெடுப்பின்றி சட்டம் நிறைவேற்ற பயன்படும் 49.3 எனும் அரசியலமைப்பு சட்டத்தினை பயன்படுத்தி நேற்றைய தினம் தனது வரவுசெலவுத் திட்டத்தினை பிரதமர் Elisabeth Borne முன்வைத்தார். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத மக்ரோனின் அரசாங்கம், இந்த சட்டத்தினை பயன்படுத்துவது இது 15 ஆவது தடவையாகும். அதையடுத்து, RN ம்ற்றும் La France insoumise ஆகிய கட்சிகள் மக்ரோனின் அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை (motions de censure) கொண்டுவந்திருந்தனர். 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தினை பகுதி […]

இலங்கை

இலங்கையர் ஒருவரும் பணயக்கைதியாக பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்!

  • October 31, 2023
  • 0 Comments

இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலின் போது காணாமல் போன மற்றைய இலங்கையர் பற்றிய பிரத்தியேக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி ஹமாஸின் பணயக்கைதிகளில் சுஜித் யத்வார பண்டாரவும் இருக்கலாம் என இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. எவ்வாறாயினும், யாதவர பண்டாரவின் பிள்ளைகள் வழங்கிய டி.என்.ஏ மாதிரிகளுக்கும் சடலங்களுக்கும் இடையில் பொருத்தம் உள்ளதா என்பது தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இதேவேளை, கடத்தப்பட்டவர்களில் சுஜித்தும் அடங்குவதாக சந்தேகிக்கப்படுவதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். மேலும், […]

இலங்கை

இலங்கையில் 08 ரயில் சேவைகள் இரத்து!

  • October 31, 2023
  • 0 Comments

08 ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக  ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. புகையிரத சாரதிகளின் பற்றாக்குறை காரணமாக ரயில் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 2017ஆம் ஆண்டிலிருந்து புகையிரத சாரதிகளை ரயில்வே திணைக்களம் நியமிக்கவில்லை எனவும் இதனால் தற்போது சுமார் 150 ரயில் சாரதிகள் பற்றாக்குறை நிலவுவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா

ரஷ்யாவின் குற்றச்சாட்டுகளை நிராகரித்த அமெரிக்கா

ஞாயிற்றுக்கிழமை தாகெஸ்தான் விமான நிலையத்தில் நடந்த இஸ்ரேலுக்கு எதிரான கலவரம் உக்ரைன் மற்றும் மேற்கு நாடுகளால் ஏற்பாடு செய்யப்பட்டது என்ற ரஷ்யாவின் “அபத்தமான” கூற்றுகளை அமெரிக்கா நிராகரித்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்த சம்பவம் ரஷ்யாவில் “குழப்பத்தை” பரப்பும் முயற்சியின் ஒரு பகுதியாகும் என்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை மாலை ரஷ்யாவின் வடக்கு காகசஸில் உள்ள மகச்சலா விமான நிலையத்தில் இஸ்ரேலில் இருந்து வந்த விமானத்தில் யூத பயணிகளைத் தேடி ஒரு கும்பல் […]

ஐரோப்பா

பிரான்ஸில் கைது செய்யப்பட்ட பெண்!

  • October 31, 2023
  • 0 Comments

பிரான்சின் தலைநகருக்குள் பயங்கரவாதத்திற்கு ஆதரவாக பேசிய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் ரயில் சென்று மேற்படி நடவடிக்கைகளுக்கு ஆதரவாக பேசியதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளதுடன், அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பிரான்ஸில் அண்மையில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதல்களுக்கு பிறகு நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதன்பிறகு நாடு முழுவதும் குண்டுவெடிப்பு குறித்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன. இருப்பினும் அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறவில்லை. பாதுகாப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டப்பின் இடம்பெற்ற முதலாவது […]