இலங்கை

உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்கு அமைச்சரவை அனுமதி

உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின் போது உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கை தனது வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதை நிறுத்தியது. எவ்வாறாயினும், பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு மெல்ல மீண்டு வருவதால், இலங்கை சர்வதேச கடன் வழங்குனர்களுடன் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தில் ஈடுபட வேண்டும். சர்வதேச நாணய நிதியத்துடன் […]

ஐரோப்பா

புதிய சர்ச்சையில் சிக்கிய ரிஷி சுனக்!

  • June 28, 2023
  • 0 Comments

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் புதிய சர்ச்சையொன்றில் சிக்கியுள்ளார். அதாவது ரிஷி சுனக் Pilot V” fountain என்ற பேனையை  பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இந்த பேனையானது, எழுதிய சிலமணி நேரங்களில் அழியக்கூடிய தன்மையை கொண்டுள்ளது. இந்த பேனையை பயன்படுத்தி அவர் ஆவணங்களில் கையெழுத்திட்டாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில், இந்த விடயத்தை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ரிஷி சுனக்கின் செய்தி தொடர்பாளர்,  “இது சிவில் சேவையால் வழங்கப்பட்ட மற்றும் பரவலாகப் பயன்படுத்தப்படும் […]

ஆசியா

கைப்பற்றப்பட்ட 5ஆயிரத்து 700 கிலோ போதைப்பொருட்களுக்கு தீயிட்ட கம்போடிய பொலிஸார்

  • June 28, 2023
  • 0 Comments

கம்போடியாவில் கடத்தல்கார்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 5ஆயிரத்து 700 கிலோ போதைப்பொருகள் தீயிட்டு அழிக்கப்பட்டது. அந்நாட்டில் கடந்த ஒராண்டில் சுமார் 5ஆயிரத்து 700கிலோ அளவிலான கொக்கைன்கள்,ஹெரோயின்கள் ,மெத்தன்பெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி அந்நாட்டு உள்துறை அமைச்சர் முன்னிலையில் பொலிஸார் அவற்றை தீயிட்டு கொளுத்தினர். கம்போடியாவில் 80கிராமுக்கு மேல் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தத்கது.

ஐரோப்பா

சுவீடனில் குரான் எரிப்பு போராட்டத்திற்கு அனுமதி வழங்கிய நீதிமன்றம்

  • June 28, 2023
  • 0 Comments

சுவீடன் நாட்டில் இஸ்லாம் மற்றும் குர்தீஷ் இன மக்களின் உரிமைகளுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அந்நாட்டில், ஹார்டு லைன் என்ற அரசியல் கட்சியை சேர்ந்த தலைவரான ரஸ்மஸ் பலூடன் என்பவர் ஸ்டாக்ஹோம் நகரில் துருக்கி தூதரகம் அருகே கடந்த ஜனவரியில், குரான் நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இதற்கு சவுதி அரேபியா, ஜோர்டான் மற்றும் குவைத் உள்ளிட்ட பல அரபு நாடுகள் கடுமையாக கண்டனம் தெரிவித்தன. இதன் தொடர்ச்சியாக கடந்த ஜனவரி இறுதியில், நேட்டோவில் […]

மத்திய கிழக்கு

இஸ்ரேலில் சிறையில் இருந்து விந்தணுக்களை கடத்த முயன்ற பாலஸ்தீனியர்!

  • June 28, 2023
  • 0 Comments

இஸ்ரேல் நாட்டின் தெற்கு பகுதியில் ரேமன் சிறை உள்ளது. இதில், பாலஸ்தீனிய நாட்டை சேர்ந்த சிறை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், பாலஸ்தீனியர் ஒருவர் சிறையில் உள்ள மற்றொரு பாலஸ்தீனிய கைதியின் விந்தணுக்களை பாட்டில் ஒன்றில் வைத்து கடத்தி சென்று உள்ளார் என கூறப்படுகிறது. ரேமன் சிறைக்கு வெளியே உள்ள சீர்திருத்த இல்லத்தில் அந்த பாலஸ்தீனியர் தங்கி உள்ளார். இதுபற்றிய தகவல் அறிந்து இஸ்ரேலிய பாதுகாவல் படையினர் அவரை பிடித்து, விசாரித்து உள்ளனர். இதன்பின்னர், விந்தணுக்களை […]

இந்தியா

பணி ஓய்வு பெறும் நாளில் 65 வழக்குகளில் தீர்ப்பளித்த பெண் நீதிபதி

டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருப்பவர் முக்தா குப்தா. இவர் டெல்லி அரசு வழக்கறிஞராக நீண்ட காலம் பணியாற்றி பின்னர் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். இவர் அரசு வழக்கறிஞராக இருந்தபோது ஜெஸிகா லால், நைனா சாஹ்னி, நிதீஷ் கட்டாரா போன்ற பிரபல கொலை வழக்குகளில் ஆஜரானவர். இந்நிலையில் அவர் நேற்றுடன் (ஜூன் 27) நீதிபதியாக பணி ஓய்வுபெற்றார். இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் ஒரே நாளில் 65 கிரிமினல் வழக்குகளில் தீர்ப்புகளை வழங்கியுள்ளார். இதில் பல […]

இலங்கை

அஸ்வெசும திட்டம் : போராடுவதற்கு பதிலாக மேன்முறையீடு செய்யுங்கள் – ஜீவன் தொண்டமான்!

  • June 28, 2023
  • 0 Comments

அஸ்வெசும சமூக நலன்புரி கொடுப்பனவை பெறுவதற்கு தகுதி இருந்தும் உத்தேச பெயர் பட்டியலில் பெயர் இடம்பெற்றிருக்காவிட்டால் அது தொடர்பில் எதிர்வரும் ஜுலை 10 ஆம் திகதிக்குள் மேன்முறையீடு செய்யுமாறு அமைச்சருமான ஜீவன் தொண்டமான் அறிவித்துள்ளார். கொழும்பில் இன்று   (28)  நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு கூறினார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,  ”மக்களை வீதிகளுக்கு இறக்கி போராட்டங்களை நடத்துவதைவிட அவர்களை மேன்முறையீடு செய்வதற்கு ஊக்குவிக்குமாறு அரசியல் பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொள்கிறேன். அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்கான பெயர் பட்டியலை தயாரிக்கும்போது […]

உலகம்

ரஸ்யாவின் தாக்குதலில் உக்ரைனில் இரட்டையர்களான சகோதரிகள் உட்பட 10பேர் பலி

உக்ரைனின் ரமடோர்ஸ்கில் உள்ள பீட்சா உணவகம் மீது ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் இரட்டை சகோதரிகள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். யூலியா அனாஅக்சென்சென்கோ என்ற 14 வயது சகோதரிகள் ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். கிழக்கு உக்ரைனில் இடம்பெற்ற இந்த தாக்குதலில் இவர்கள் உயிரிழந்துள்ளனர். ரஸ்ய ஏவுகணைகள் இரண்டு தேவதைகளின் இதயதுடிப்பை நிறுத்தின என ரமடோர்ஸ்க் நகரப்பேரவை தெரிவித்துள்ளது. 17 வயது யுவதியொருவரும் உயிரிழந்துள்ளார், எட்டுமாத குழந்தை காயமடைந்துள்ளது

பொழுதுபோக்கு

காஞ்சனாவில் நடித்தது எனது வாழ்க்கையில் மிகப்பெரிய தவறு: திருநங்கை பிரியா

என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு காஞ்சனா படத்தில் நடித்தது என்று திருநங்கை பிரியா கூறியுள்ளார். ராகவா லாரன்ஸ், கோவா சரளா, ராய் லட்சுமி மற்றும் சரத்குமார் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் காஞ்சனா. மாபெரும் வெற்றி பெற்ற இப்படத்தில் திருநங்கை பிரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த பிரியா, “காஞ்சனா படத்தின் வெற்றிக்கு பிறகு நான் கோடிக்கணக்கில் சம்பாதிப்பேன் என்று மக்கள் நினைப்பார்கள், ஆனால் அப்படி […]

இலங்கை

ஜனாதிபதிக்கு அவசர கடிதம் எழுதிய மருத்துவ சங்கம்!

  • June 28, 2023
  • 0 Comments

மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபையின் செயற்பாடுகள் தற்போது முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயத்தில் தலையிடுமாறு ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் வைத்தியர்கள் இன்று (28.06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தனர். இது தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்தியர் வின்யா ஆரியரத்ன,மிக உயர்ந்த தரத்துடன் பராமரிக்கப்படுகிறது என்பதை உறுதிப்படுத்துவது மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் கடமை. இது இடம்பெறாதது வருத்தத்திற்குரியது” எனத் தெரிவித்துள்ளார்.