பொழுதுபோக்கு

பிரபல பாப் பாடகி மடோனா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

பிரபல அமெரிக்க பாப் பாடகி மடோனா பாக்டீரியா தொற்று காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செரிஷ் என்ற படத்தில் நடித்தபோது மடோனாவுக்கு கடுமையான பாக்டீரியா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவரது மேலாளர் கை ஒசிரி தெரிவித்துள்ளதாவது, “மடோனாவுக்கு கடந்த 25ஆம் திகதி தொற்று ஏற்பட்டது. இதனால் அவர் பல நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் தங்க வைக்கப்பட்டார். தற்போது மடோனாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கனடாவின் வான்கூவரில் ஜூலை 15ஆம் […]

உலகம்

ஜப்பானில் சிவப்பாக மாறிய ஆற்று நீர் ! பொதுமக்கள் அதிர்ச்சி- அட காரணம் இதுவா?

ஜப்பானில் ஒக்கினாவா ஆற்று நீர் திடீரென செந்நிறமாக மாறியதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஜப்பான் நாட்டின் ஒக்கினாவா தீவுப்பகுதியில் உள்ள நாகோ நகரில் துறைமுகப் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள ஆற்று நீரானது திடீரென செந்நிறமாக மாறி காட்சியளித்தது. வழக்கமாக நீல நிறத்தில் தெளிவாக தென்படும் இந்த பகுதி நீரானது செந்நிறமாக மாறியதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த விசாரணையில் அருகில் உள்ள பீர் தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட கசிவு […]

இலங்கை

“சூனியம் வைக்கப்பட்டுள்ளது – தயவு செய்து செய்யாதீர்கள் …” : யாழில் நடத்த சுவாரஸ்ய சம்பவம்!

  • June 29, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது வீட்டின் முன் குப்பைகளை கொண்ட கூடாது என்பதற்காக காட்சிப்படுத்திய போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த நபரின் வீடு வீதியோரமாக அமைந்துள்ளது. இந்நிலையில்  பலர் அந்த வீதியில் குப்பைகளை கொட்டிச்சென்றுள்ளனர். இதனால் பல கஸ்டங்களை அனுபவித்த அவர் இறுதியில் பொறுமை இழந்து வீட்டின் வாயில் பகுதியில் பதாகை ஒன்றை காட்சிப்படுத்தியுள்ளார். அதில் சூனியம் வைக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக விபத்து ஏற்படும். ஆகவே தயவு செய்து குப்பைகளை கொட்டாதீர்கள் என எழுதியுள்ளார். […]

இலங்கை

இலங்கைக்கு இதுவரையான காலப்பகுதியில் வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

  • June 29, 2023
  • 0 Comments

இலங்கைக்கு இதுவரையான காலப்பகுதியில் ஆறு இலட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 608489 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அத்துடன் ஜூன் மாதத்தில் பதிவு செய்யப்பட்ட சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 84இ003 எனவும் அவர்களில் பெரும்பாலோர் இந்தியப் பிரஜைகள் எனவும் அதிகாரசபை மேலும் கூறியுள்ளது. இதேவேளை ரஷ்யா,  இங்கிலாந்து,  அவுஸ்திரேலியா,  ஜேர்மனி மற்றும் […]

உலகம்

ரோமில் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட 17 வயது சிறுமி : இலங்கை இளைஞர் கைது!

இத்தாலியின் ரோம் நகரில் 17 வயது சிறுமியை கொலை செய்து குப்பை தொட்டியில் வீசிய சம்பவம் தொடர்பில் இலங்கை இளைஞர் ஒருவர் இனறு கைது செய்யப்பட்டுள்ளார். ரோமில் உள்ள ப்ரிமவேரா மாவட்டத்தில் புதன்கிழமை மாலை இந்தப் படுகொலை நடந்துள்ளது. இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட சந்தேக நபர், இத்தாலிய தலைநகரில் பிறந்தவர், கொலை செய்யப்பட்ட மிச்செல் மரியா காசோ கர்ப்பமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இளைஞரிடம் நீண்ட நேரம் விசாரணைகள் […]

பொழுதுபோக்கு

வடிவேலு கம்பேக்.. இப்படியொரு நடிப்பா.. சம்பவம் செய்தார் மாரி செல்வராஜ்….

  • June 29, 2023
  • 0 Comments

உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம் மாமன்னன் என்பதை விட வடிவேலுவின் சரியான கம்பேக் படமாக மாமன்னன் மாறி உள்ளது. டைட்டில் கார்டில் இருந்தே வடிவேலுவுக்கு முன்னுரிமை கொடுத்து மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தில் அவரை வைத்து தரமான சம்பவத்தை செய்துள்ளார். எந்த இடத்திலும் பிசிறு தட்டாத நடிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் இந்த படத்தை ஒருமுறையாவது பார்க்க வைத்து விடுவார் என்றால் அது மிகையல்ல. கண்டிப்பாக வடிவேலுவின் நடிப்புக்காகவே தாராளமாக மாமன்னன் படத்தை பார்க்கலாம். மாமன்னன் படத்தின் ஆடியோ […]

இலங்கை

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு – EPF வைப்புத்தொகையின் வட்டி தொடர்பில் வெளியான தகவல்

உள்நாட்டு கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகள் காரணமாக EPF வைப்புத்தொகைக்கு செலுத்தப்படும் 09% வட்டி பாதிக்கப்படாது என்றும் EPF வைப்புக்கள் கைப்பற்றப்பட மாட்டாது என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் நிதி அமைச்சர் நந்தலால் வீரசிங்க உறுதியளித்தார். இன்று (29) முற்பகல் ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், 57 மில்லியன் வைப்பாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுமென உறுதியளித்தார். அதேபோல், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையிலிருந்து வங்கி […]

ஐரோப்பா

புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கிய பிரித்தானிய நீதிமன்றம்!

  • June 29, 2023
  • 0 Comments

புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு அனுப்பும் திட்டம் சட்டவிரோதமானது என பிரித்தானிய நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ருவாண்டா திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் காரணமாக புகலிடக்கோரிக்கையாளர்கள் அவர்களின் சொந்தநாடுகளிற்கே திருப்பி அனுப்பப்படும் ஆபத்துள்ளது என நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும் இந்த திட்டத்தில் உள்ள குறைபாடுகள் திருத்தப்படும் வரை புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு அனுப்புவது சட்டவிரோதமானது எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அத்துடன் இந்த வழக்கு குறித்து மேல் முறையீடு செய்வதற்கான காரணங்களையும் நீதிபதிகள் ஒருமனதாக நிராகரித்துள்ளனர்.    

பொழுதுபோக்கு

கேப்டன் மில்லர் படத்தில் எதிர்பாராத திருப்பம்!! விலகிய நடிகர்

  • June 29, 2023
  • 0 Comments

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் ராக்கி மற்றும் சாணி காகிதம் ஆகிய படங்களுக்கு அடுத்து தனது மூன்றாவது படமான கேப்டன் மில்லர் படத்தை தனுஷை வைத்து இயக்கி வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இந்த படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். முக்கியமானக் காட்சிகளை தென்காசி அருகே படக்குழு படமாக்கி வருகிறது. இந்த படத்தில் ஏகப்பட்ட முன்னண நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். தனுஷுடன் சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், பிரியங்கா மோகன், உறியடி விஜய்குமார், உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். […]

இந்தியா

மணிப்பூரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி! போலீஸார் எடுத்த நடவடிக்கை

மணிப்பூரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி போலீஸாரினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். மணிப்பூரில் மைதேயி சமூகத்தினர் மற்றும் குகி பழங்குடியினர் இடையே கடந்த 3ம் திகதி முதல் வன்முறை நடந்து வருகிறது. 100க்கும் மேற்பட்டோர் பலியாகிய வன்முறைக்கு பாஜகவின் பிரித்தாளும் அரசியலே காரணம் என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இதைத் தொடர்ந்து இன்றும் நாளையும் ராகுல் காந்தி மணிப்பூர் செல்ல உள்ளதாக அக்கட்சியின் அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். […]