எப்போதும் முகம் பளிச்சிட இயற்கை வைத்தியம்
முட்டையின் வெள்ளைக் கரு: புரதம் மற்றும் வைட்டமின்கள் அதிகமுள்ள முட்டையின் வெள்ளைக் கரு, சருமத்தை சுத்தம் செய்வதுடன் இறுக்கப்படுத்தும். முட்டையின் வெள்ளைக் கருவை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும். வாரம் இருமுறை இதனை செய்யலாம். தேன்: முகத்தை ஈரப்பதத்துடன் வைக்க தேன் உதவும். மேலும், முகப்பருக்கள் வராது தடுக்கும். சருமத் துளைகளை திறந்து மிகுதியாக உள்ள எண்ணெயை நீக்கிவிடும். தேனை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவி விடவும். […]