இலங்கை

இலங்கையில் பெண் ஒருவர் பல வருடங்களாக செய்த மோசமான செயல்

  • April 29, 2023
  • 0 Comments

அளுத்கமை நகரில் பெண்கள் அழகு நிலையமொன்றை நடத்தும் பெண்ணொருவர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தனது நிலையத்துக்கு பல மாதங்களாக மின்சாரத்தை திருடிய குற்றச்சாட்டில் அளுத்கமை பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அஹுங்கல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்ட நிலையில் களுத்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். இலங்கை மின்சார தனியார் நிறுவனத்தின் அளுத்கமை தலைமை அலுவலகம் மற்றும் அளுத்கமை பொலிஸின் புலனாய்வுப் பிரிவினரே இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

ராசிபலன்

ராசியோ ராசி

  • April 29, 2023
  • 0 Comments

மேஷம் -ராசி: நெருக்கமானவர்களால் சில விரயங்கள் ஏற்படும். வியாபார பணிகளில் மந்தமான சூழ்நிலைகள் அமையும். பிரபலமானவர்களின் அறிமுகத்தால் மாற்றங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். சுபகாரியம் சார்ந்த முயற்சிகள் கைகூடும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வெற்றி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம். அஸ்வினி : விரயங்கள் ஏற்படும். பரணி : மாற்றமான நாள். கிருத்திகை : […]

கருத்து & பகுப்பாய்வு

உலகிலேயே விலையுயர்ந்த தங்கம் கலந்த தண்ணீர் – அதிர வைக்கும் விலை

  • April 29, 2023
  • 0 Comments

உலகில் விலையுயர்ந்த தண்ணீர் ஒரு பாட்டிலின் விலை 55,000 அமெரிக்க டொலர்கள் என தெரியவந்துள்ளது. அந்த தங்கத்தில் 24 கேரட் தங்கத் துகள்கள் கலந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2010 ஆம் ஆண்டில் கின்னஸ் புத்தகத்தில் உலகிலேயே விலை உயர்ந்த தண்ணீர் என அக்வா டி கிறிஸ்டல்லோ ட்ரிபுடோ எ மோடிக்லியானி பதிவு செய்யப்பட்டது. பிரான்ஸ் நாட்டிலிருந்து ஒரு நன்னீர் ஊற்றில் இருந்தும், ஃபிஜி நாட்டில் ஒரு நீரூற்றில் இருந்தும், ஐஸ்லாந்தின் பனிக்கட்டி ஆற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் ஆகிய […]

வாழ்வியல்

நின்றுகொண்டே சாப்பிடுவதால் காத்திருக்கும் பாதிப்புகள்

  • April 29, 2023
  • 0 Comments

இலங்கையர்கள் மற்றும் இந்தியர்கள் ஆரோக்கியமாய் வாழ முக்கிய காரணமாய் இருந்தது அவர்களின் உணவுமுறைதான். அவர்கள் சாப்பிட்ட சத்தான உணவுகள் மட்டுமின்றி உணவை அவர்கள் சாப்பிட்ட முறையும் அவர்களின் ஆரோக்கியத்திற்கு காரணமாய் இருந்தது. கடந்த தலைமுறை வரையே மக்கள் தரையில் சம்மணங்கால் போட்டு சாப்பிடுவதே பழக்கமாக இருந்தது. ஆனால் இப்பொழுது அவை அனைத்தும் மாறிவிட்டது. அனைத்து வீடுகளிலும் இப்பொழுது டைனிங் டேபிள் வர தொடங்கிவிட்டது. பல உணவங்களில் நின்று கொண்டு சாப்பிடும் பழக்கமும் பரவ தொடங்கிவிட்டது. இது மட்டுமின்றி […]

அறிந்திருக்க வேண்டியவை

வாழ்க்கையில் கட்டாயம் பின்பற்ற வேண்டிய 30 வழி முறைகள்!

  • April 29, 2023
  • 0 Comments

மனதையும் உடலையும் பாதுகாப்பாக வைத்திருப்பது பெருமளவில் நமது வாழ்க்கை முறையைச் சார்ந்தது. அதாவது, நமது உணவு, தூக்கம், உடல் சார்ந்த நடவடிக்கைகள், அன்றாடச் செயல்பாடுகள், பழக்க வழக்கங்கள் எனப் பல அம்சங்களைப் பொறுத்தது. வாழ்க்கை முறையில் தேவையான மாற்றங்களைச் செய்துகொண்டால் மனமும் உடலும் பாதுகாப்பாக அமையும். 01. தண்ணீர் நிறைய குடியுங்கள். 02. காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும், இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும். […]

ஐரோப்பா

பிரான்ஸில் 22 வயதுடைய இளைஞனுக்கு நேர்ந்த கதி

  • April 29, 2023
  • 0 Comments

பிரான்ஸில் 22 வயதுடைய இளைஞன் ஒருவர் வாகனம் ஒன்றுக்குள் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Nangis (Seine-et-Marne) நகரில் இச்சம்பவம் கடந்த திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. rue Bel-Air வீதியில் உள்ள தரிப்பிடம் ஒன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த Citroën DS3 வகை மகிழுந்துக்கு ஒன்றின் சாரதி இருக்கையில் வைத்து குறித்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டார். கைத்துப்பாக்கி ஒன்றின் மூலம் அவர் இரு முறை சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். விசாரணைகளை முன்னெடுத்துள்ள ஜொந்தாமினர், முதற்கட்டமாக சடலத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனைகளுக்கு […]

ஐரோப்பா

ஜெர்மனி மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

  • April 29, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் புகைபிடிப்பவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. ஜெர்மனியில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருவதாக ஒரு புள்ளி விபரம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஜெர்மனியில் விளையாட்டுக்கு அடிமையாகின்றவர்கள் அல்லது சூதாட்டத்துக்கு அடிமையாகின்றவர்களின் எண்ணிக்கையே தற்போது அதிகரித்துள்ளதாக ஜெர்மனியின் புள்ளி விபர திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ஜெர்மனியர்கள் புகைப்பிடிப்பதை விட சூதாட்டம் மற்றும் விளையாட்டுகளில் ஈடுப்படுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஜெர்மனியில் இந்த வருடம் புற்று நோயின் காரணமாக 2 லட்சத்து 41 ஆயிரம் பேர் இறக்க கூடும் என்ற […]

வட அமெரிக்கா

அமெரிக்க மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

  • April 29, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் சிகரெட் பிடிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிதாக மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வொன்று இந்த விடயத்தை குறிப்பிடுகிறது. அமெரிக்காவின் தொற்றுநோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு நிலையம் நடத்திய ஆய்வில் 27,000க்கும் அதிகமான அமெரிக்கர்கள் பங்கெடுத்தனர். நேற்று முன்தினம் வெளிவந்த ஆய்வு முடிவுகளின்படி 9இல் 1 அமெரிக்கர் மட்டுமே சென்ற ஆண்டு புகைபிடித்தார். சிகரெட் புகைபிடிப்பவர் எண்ணிக்கை… – 2021ஆம் ஆண்டில் 12.6 விழுக்காடாக இருந்தது – 2022ஆம் ஆண்டில் 11.3 விழுக்காடாக குறைந்தது மின்-சிகரெட்டுகளைப் புகைப்பவர்களின் எண்ணிக்கையோ 4.7 விழுக்காட்டிலிருந்து […]

இலங்கை

இலங்கையை விட்டு வெளியேறிய தமிழர்கள் 7 பேர்!

  • April 29, 2023
  • 0 Comments

முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் உட்பட இலங்கை தமிழர்கள் 7 பேர் அகதிகளாக நேற்று தனுஷ்கோடி மணல் திட்டு பகுதியில் வந்திறங்கினர் இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் அவர்கள் வெளியேறியுள்ளனர். தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அருகே உள்ள 2 ஆவது மணல் திட்டையில் நேற்று காலை குழந்தைகள் உட்பட 7 பேர் தவித்தபடி நின்றதை கடலுக்குச் சென்ற மீனவர்கள் பார்த்தனர். இதுகுறித்து அவர்கள் கடலோர பாதுகாப்பு குழும பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து […]

ஆசியா

மலேசியாவில் நடந்த சோகம் – வெப்பத்தால் உயிரிழந்த ஒரு வயது குழந்தை

  • April 29, 2023
  • 0 Comments

மலேசியாவின் கிளந்தான் மாநிலத்தில் வெப்பத்தால் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நூர் இமானி (Nur Imani) எனும் அந்தக் குழந்தைக்கு ஒரு வயது 7 மாதமாகின்றது. நூர் இமானி கடந்த ஒருவாரமாக இருமல், வாந்தி முதலிய உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டிருந்ததாகக் குழந்தையின் தந்தை தெரிவித்துள்ளார். குழந்தை வெப்பத் தாக்கத்தால் மரணமடைந்தது பிரேதப் பரிசோதனையில் தெரியவந்தது. குழந்தையின் நீர்ச்சத்து குறைந்துவிட்டது. அதனால் அதன் நுரையீரல் சுருங்கிப்போனது. திங்கட்கிழமை முதல் குழந்தையின் நிலை கவலைக்கிடமானது. அன்றிரவு பெற்றோர் […]