Site icon Tamil News

2019 இல் நியூசிலாந்து நோக்கி பயணித்த 248 பேருக்கு என்ன நேர்ந்தது : வெளியாகிய புதிய தகவல்!

2019 இல் நியுசிலாந்திற்கு ஆபத்தான  கடல் பயணத்தை மேற்கொண்ட 248 இலங்கையர்கள் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி குறித்த 248 பேரும் காணாமல்போயிருக்கலாம் என  நியுசிலாந்தின் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

2019  ஜனவரி 12ம் திகதி ஆட்கள் பயணிக்கும் படகாக மாற்றப்பட்ட 27 மீற்றர் மீன்பிடிப்படகு இந்தியாவிலிருந்து 248 தமிழர்களுடன் புறப்பட்டது. அந்த படகு அவுஸ்திரேலியா அல்லது நியுசிலாந்தை சென்றடைய முயற்சி செய்திருக்கலாம் என நியுசிலாந்து அரச ஆவணங்கள் தெரிவித்துள்ளன.. அதன்பின்னர் அந்த படகிலிருந்தவர்கள் குறித்து எந்த தகவலும் இல்லை என நியுசிலாந்தின் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளின்போது கைதுசெய்யப்பட்ட பிரபுதண்டபாணி என்றநபர் குறிப்பிட்ட படகு நியுசிலாந்திற்கே சென்று கொண்டிருந்தது என இந்திய பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார். தங்கள் பயணத்தை பாதுகாப்பு தரப்பினர் கண்டுபிடிப்பதை தவிர்ப்பதற்காக படகில் பயணித்தவர்கள் ஜி.பி.எஸ் சாதனைகளை தவிர்த்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படகு நீரில் மூழ்கியிருக்கவேண்டும் அல்லது இலங்கை அதிகாரிகள் இவர்களை கைதுசெய்திருக்கவேண்டும் இதனால் அவர்களிற்கு ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸ் உத்தியோகத்தர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version