செய்தி தமிழ்நாடு

13 வயது சிறுமியின் தலைமுடி ஜெனரேட்டரில் மாற்றி சிறுமி சிகிச்சை பலனின்றி பலி

காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர்  ஊராட்சிக்கு உட்பட்ட விச்சாந்தாங்கள் கிராமத்தில் நேற்று இரவு அங்காளம்மன் கோவில் கடைசி நாள் விழா நடைபெற்றது.

மாட்டு வண்டியில் வைத்து சாமி ஊர்வலம் நடந்து கொண்டிருந்தபோது மாட்டு வண்டியின் பின்புறம் வண்ண விளக்குகள்  எரிவதற்காக  ஜெனரேட்டர் பொருத்தப்பட்டிருந்தது.

சுவாமி ஊர்வலத்தின் பின்னே சென்னை சேர்ந்த சரவணன் என்பவரின் மகள் லாவண்யா என்ற சிறுமி மாட்டு வண்டியின் பின்னே ஏரி அமர முயற்சித்த பொழுது அங்கிருந்த ஜெனரேட்டரில் லாவண்யாவின் தலைமுடி சிக்கிக்கொண்டு முடி பிசைத்துக்கொண்டு போனதால் படுகாயம் அடைந்த லாவண்யாவை கிராமத்தினர் தூக்கிக்கொண்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்  .

இது தொடர்பாக ஜெனரேட்டர் வாடகை விடும் உரிமையாளர் முனுசாமி என்பவரை  காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து நமது செய்தியாளர்கள் விச்சந்தாங்கல் கிராமத்தில் விசாரித்த பொழுது, சரவணன் என்பவர் சென்னை கோடம்பாக்கத்தில் வசித்துவருவதாகவும் அவருடைய மனைவி இறந்து விட்ட காரணத்தினால் மனைவியின் பெற்றோர்களான விச்சந்தாங்கல் கிராமத்தில் உள்ள தாத்தா காண்டீபன் மற்றும் பாட்டி லதாவிடம் கடந்த நான்கு வருடங்களாக பராமரிப்பில்  வளர்ந்து வந்தார் .

லாவண்யா களக்காட்டூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.

லாவண்யாவின் தம்பி புவனேஸ்வர் அதே பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.

லாவண்யா பள்ளியில் நன்றாக படிக்க கூடியவர் என்றும் பல கல்வி சார்ந்த மெடல்களை வாங்கி இருப்பதாகவும் அப்துல் கலாம் உள்ளிட்ட சில சான்றிதழ்களையும் வாங்கியுள்ளதாக பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் தான் ஜெனரேட்டரில் சிக்கி சிறுமி இறந்தது கிராமத்தில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவில் திருவிழா எனும் பொழுது காவல்துறையினர் பாதுகாப்புக்கு செல்வது வழக்கம்  நேற்று நடைபெற்ற திருவிழாவில் காவலர்கள்  இல்லாததும்  இந்த விபத்துக்கு காரணம் என கருதப்படுகிறது .

எனவே இது போன்ற திருவிழாக்கள் மற்றும் ஜெனரேட்டர்  மின்விளக்குகள் ஒளிர்விக்கும் பொழுது பாதுகாப்பான முறையில் செயல்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

(Visited 10 times, 1 visits today)

priya

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
Skip to content