Site icon Tamil News

ஜெர்மனியில் பிறக்கும் குழந்தைகளுக்கு 10 ஆயிரம் யூரோ நிதி உதவி!

ஜெர்மனி நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் பிறக்கின்ற குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அரசாங்கமானது 10 ஆயிரம் யுரோ நிதி உதவி திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என தீர்மானித்துள்ளது.

சிடியுவோ என்று சொல்லப்படுகின்ற ஜெர்மனியின் பிரதான எதிர் கட்சியினுடைய பொது செயலாளர் மரியோ காரியோ அவர்கள் இது தொடர்பில் கருத்து தெரிவித்து இருக்கின்றார்.

அதாவது எதிர்காலத்தில் இந்த பிள்ளைகள் இந்த 10 ஆயிரம் யூரோ பணத்தை கொண்டு தங்களது பல்கலைகழக கல்வியோ அல்லது உயர் கல்வியை சிறந்த முறையில் மேற்கொள்வதற்கும் சமூதாயத்தில் சமமான நிலையை அடைவதற்கும் இந்த நிதியம் உதவி செய்யும் என்றும் அவர் கூறியிருக்கின்றார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு 2022 ஆம் ஆண்டு தை மாதத்தில் இருந்து கார்த்திகை மாதம் மட்டும் மொத்தமாக 6 லட்சத்து 75 ஆயிரம் குழந்தைகள் ஜெர்மனியில் பிறந்துள்ளது என்ற புள்ளி விபரம் வெளியாகியுள்ளது.

இதன்படி ஜெர்மனி அரசாங்கத்துக்கு வருடம் ஒன்றுக்கு 6 பில்லியன் எழு நுற்றி 65 மில்லியன் யுரோக்கள் இந்த நிதியத்துக்கு தேவைப்படும் என்ற கருத்தை அவர் முன்வைத்துள்ளார்.

கடந்த ஆண்டு எஸ் பி டி என்று சொல்லப்படுகின்ற ஆளும் கூட்டுகட்சியின் பிரதான கட்சியான எஸ்பிடி கட்சியினுடைய முக்கிய அரசியல் வாதி ஒருவரும் அதே கருத்தை தெரிவித்து இருந்தார்.

அந்த அரசியல் வாதியுடைய கருத்தின் படி பிறக்கின்ற குழந்தைகளுக்கு 20 ஆயிரம் யூரோக்கள் அவர்களுடைய விஷேட வங்கி கணக்கு ஒன்றில் செலுத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்து.

 

Exit mobile version