விஜய் மல்லையாவை தலைமறைவு குற்றவாளியாக அறிவித்த மனுவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
தொழிலதிபர் விஜய் மல்லையா 9 ஆயிரம் கோடி இந்திய ரூபாய்கள் வங்கி கடன் பெற்று மோசடி செய்துவிட்டு வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ளதாக பாரிய அளவில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மும்பை சிறப்பு நீதிமன்றம் மல்லையாவை தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தது.
இதை எதிர்த்து மல்லையா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், நேற்று இந்த மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
(Visited 2 times, 1 visits today)