மனைவியிடம் காசு வாங்க குழந்தையை அடித்து துன்புறுத்திய தந்தை
ஒன்றரை வயது சிறுமியை கொடூரமாக சித்திரவதை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரின் தந்தை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பகமூன தர்கல்லேவ, கமஎல பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய மகேஷ் ரொஹான் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று (10) ஹிகுரகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குழந்தை பாதுகாப்பிற்காக பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பக்கமூன பொலிஸார் தெரிவித்தனர்.
வெளிநாட்டில் இருக்கும் தனது மனைவியிடம் இருந்து பணம் பெறுவதற்காக, குழந்தையை அடித்து துண்புறுத்தி, அதனை காணொளியாக பதிவு செய்து சந்தேகநபர் அனுப்பியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
(Visited 8 times, 1 visits today)