மந்திரவாதி சொன்ன வார்த்தை.. 10 வயது சிறுவன் நரபலி – பின்னர் தெரிய வந்த அதிர்ச்சி காரணம்!
இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் 10 வயது சிறுவன் கடத்தப்பட்டு, நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பர்சா என்ற கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ண வர்மாவின் 10 வயது மகன் விவேக். இவர் கடந்த 23ம் திகதி காணாமல் போனார்.மகனை எங்கு தேடியும் கிடைக்காததால் பதறிப் போன பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் தேடுதல் பணியில் இறங்கினர். அப்போது வயல்வெளி ஒன்றில் சிறுவன் விவேக் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.அவரது உடலைக் கைப்பற்றிய பொலிஸார் நடத்திய விசாரணையில், சிறுவனின் உறவினரான அனூப் என்பவர் விவேக்கை நரபலி கொடுத்ததாக தெரிய வந்தது.
தனது இரண்டரை வயது ஆண் குழந்தை மனநலம் குன்றிய நிலையில் இருப்பதால், உடல்நிலையை சரிசெய்ய அனூப் மந்திரவாதி ஒருவரை நாடியுள்ளார்.நரபலி கொடுத்தால் உங்கள் குழந்தை சரியாகிவிடும் என்று அவர் கூறியதால், உறவினர் மகனான விவேக்கை கடத்தி நரபலி கொடுத்துள்ளார் அனூப்.
இதற்கு சிந்தாராம் என்ற உறவினர் அவருக்கு உதவியுள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அனூப், சிந்தாராம் மற்றும் மந்திரவாதி ஆகிய மூவரையும் பொலிஸார் கைது செய்தனர்.