பிரித்தானியாவில் 2 மாதங்களுக்கு முன் தொலைபேசியை தவறவிட்டவருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி
பிரித்தானியாவில் உள்ள பனிச்சறுக்குத் தளத்தினுள் தவறுதலாக விழுந்த கையடக்கதொலைபேசி 2 மாதங்களின் பின்னர் அதன் உரிமையாளரிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.
8 வாரங்களுக்கு பனியில் உறைந்திருந்த போதிலும் அது இயங்கியதால் உரிமையாளர் ஆச்சரியமடைந்துள்ளார்.
நவம்பரில் தளத்தினுள் சுமார் 60,000 லிட்டர் தண்ணீர் ஊற்றப்பட்ட பிறகு கைத்தொலைபேசி அங்கு சிக்கிக்கொண்டது.
அது தளத்தின் கட்டுமானத்தில் உதவிய ஊழியரின் மகளுக்குச் சொந்தமானது. மீட்கப்பட்ட கையடக்க தொலைபேசி எப்போதும் போல் செயல்படுவதைக் கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.
தளத்தின் இரும்புக் கட்டமைப்பு மீது அது தவறுதலாக வைக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
பனியில் சிக்கிய அதன் மீது மக்கள் பல்லாயிரம் முறை சறுக்கிச் சென்றனர். கையடக்கதொலைபேசி மீண்டும் கிடைத்தது தமது மகளுக்கு அளவில்லா ஆனந்தம் என்று ஊழியர் குறிப்பிட்டுள்ளார்.